உலகம்

நைஜீரியாவை அச்சுறுத்தும் மனிதக் கடத்தல் – ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

நைஜீரியாவில் கடந்த வாரம் ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட மக்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ஜனாதிபதி போலா டினுபு Bola Tinubu இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வட-மத்திய நைஜர் மாநிலத்தில் மசூதியின் மீது தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளடங்களாக சுமார் 600 பேரைக் கடத்திச் சென்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்தியில், இது கோழைத்தனமானது எனக் கண்டித்ததுடன், இதற்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்தது.

அத்துடன் கடத்தப்பட்டவர்களை மீட்க உத்தரவிட்ட ஜனாதிபதி, “பயங்கரவாதம் நைஜீரியாவை அச்சுறுத்தாது. நாங்கள் எங்கள் மக்களைப் பாதுகாப்போம், எங்கள் சமூகங்களைப் பாதுகாப்போம் மற்றும் மனித வாழ்வின் புனிதத்தை நிலைநிறுத்துவோம்,” எனவும் உறுதியளித்தார்.

அத்துடன் கடத்தப்பட்டவர்களை மீட்கும் முயற்சிகள் குறித்த வழக்கமான தகவல்களை வழங்கவும், கடத்தப்பட்ட அனைவரையும் கணக்கில் கொள்ளவும் பாதுகாப்புத் தலைவர்களுக்கு டினுபு உத்தரவிட்டுள்ளார்.

நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் வட-மத்தியப் பகுதிகளில், பணயத் தொகைக்காகப் பெருமளவில் ஆட்கடத்தல் செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது.

அங்கு, கனரக ஆயுதங்களைக் கொண்ட குற்றக் கும்பல்கள் கிராமங்கள், பாடசாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்