மாவு சார்ந்த சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு
பரோட்டா மற்றும் முட்டை ரொட்டி உள்ளிட்ட மாவு சார்ந்த சிற்றுண்டிகளின் விலையை 05 ரூபாவால் உயர்த்த தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம், இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோதுமை மாவிற்கான விலை 17 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோதுமை மாவு விலை உயர்வு குறித்து விவாதிப்பதற்காக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய குழு அடுத்த திங்கட்கிழமை கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




