உலகம்

இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் ஈரானின் எண்ணெய் கப்பல்கள்

ஈரானின் 20 எண்ணெய் கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்குச் செல்ல முடியாமல், இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் நங்கூரமிட்டுள்ளதாக ‘டேங்கர் டிராக்கர்ஸ்’  ‘TankerTrackers’ இணையதளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷாரா ரொத்ரிகோ, இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்களை அரசாங்கம் கண்காணித்து வருவதாக கூறினார்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட கப்பல்கள் இலங்கையின் எல்லைக்கு வெளியே இருப்பதால், இது தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அந்தக் கப்பல்களுக்கு இலங்கை எந்த வசதிகளையும் வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையின் காரணமாக, சம்பந்தப்பட்ட கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில், ஈரானியக் கொடியுடன் கூடிய சுமார் 13 எண்ணெய்க் கப்பல்களும், தடைகளைத் தவிர்த்த பல கப்பல்களும், அல்லது ‘நிழல் கப்பற்படைகளும்’, பாதுகாப்பு தேடி தற்போது இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் நங்கூரமிட்டுள்ளதாக ‘டேங்கர் டிராக்கர்ஸ்’ இணையதளம் கூறுகிறது.

சம்பந்தப்பட்ட கப்பல்களில் தற்போது எரிபொருள் இல்லை என்று அந்த இணையதளம் சுட்டிக்காட்டுகிறது.

எவ்வாறாயினும் சர்வதேச சட்டத்தின்படி, ஒரு நடுநிலை நாட்டின் கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் வரை நீட்டிக்கப்படும் அதன் பிராந்திய கடல் எல்லைக்குள் கப்பல்களைத் தாக்க அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்று ‘டேங்கர் டிராக்கர்ஸ்’ இணையதளம் கூறியுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்