ஹாலே விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சி – சூத்திரதாரிகளை பகிரங்கப்படுத்த ஜெர்மன் உறுதி
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் லீப்ஜிக்/ஹாலே விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல் முயற்சிக்கு யார் பொறுப்பு என்பதை ஜெர்மன் அரசாங்கம் விரைவில் அறிவிக்கும் என்று ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் Friedrich Merz இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அரசாங்கம் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்பு வட்டாரங்கள், இந்தத் தாக்குதல் முயற்சியில் ரஷ்ய உளவுத்துறைக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றன.
ஆனால் பெர்லின் எந்த நேரடிக் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை.
பின்னணி
கடந்த ஆகஸ்ட் 4 அன்று, இராணுவப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் உக்ரேனிய அன்டோனோவ் Antonov சரக்கு விமானம் ஒன்றின் அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




