இலங்கை செய்தி

போரால் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நீதி அமைச்சர்

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஏற்பாட்டில், 2009ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகைகுளம் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, குடும்பத்தினருடன் கலந்துரையாடி அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன், உதவித்தொகைக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போதைய அரசு மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவுவதற்கு அரசு தயாராக இருக்கின்றது என்றும் நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் கிளிநொச்சி அபிவிருத்திக் குழு இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை