உலகம்

நீண்ட நாட்களுக்கு பின் தாய்லாந்தில் நங்கூரமிடப்படும் ஆபிரகாம் லிங்கன் கப்பல்

  • August 25, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நீண்டகாலம் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், அடுத்த வாரம் தாய்லாந்தில் நங்கூரமிடும் என்று தாய்லாந்து அதிகாரி ஒருவர் இன்று அறிவித்தார். ஆகஸ்ட் 22 அன்று மத்திய கிழக்கிலிருந்து புறப்பட்ட  குறித்த கப்பல், 200 நாட்களுக்கும் மேலாக எந்தத் துறைமுகத்திற்கும் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடலில் தொடர்ச்சியாக அதிக நாட்கள் இருந்ததற்கான நவீனகால சாதனையாகும் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 5000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் […]

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இலங்கை செய்தி

போரால் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நீதி அமைச்சர்

  • August 25, 2026
  • 0 Comments

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஏற்பாட்டில், 2009ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகைகுளம் பகுதியில் இடம்பெற்றது. இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, குடும்பத்தினருடன் கலந்துரையாடி அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன், உதவித்தொகைக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தார். […]

'டித்வா' புயல் காரணமாக மேல், சபரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை செய்தி

டித்வா புயல் சேதம்: 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை ஒப்புதல்

  • August 25, 2026
  • 0 Comments

‘டித்வா’ புயல் காரணமாக மேல், சபரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக, 18 மாத காலத்திற்குள் 9 பாலங்கள் புனரமைக்கப்படவுள்ளன.. இந்த புனரமைப்புப் பணிகளுக்காகச் சீனா 7,929 மில்லியன் யுவான் நிதியுதவி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஒப்பந்தம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி […]

கொழும்பு, இரத்மலான விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, பயிற்சி விமானி ஒருவரால் இயக்கப்பட்ட இலகுரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை செய்தி

இரத்மலானையில் பயிற்சி விமானம் விபத்து: தப்பினார் விமானி

  • August 25, 2026
  • 0 Comments

கொழும்பு, இரத்மலான விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, பயிற்சி விமானி ஒருவரால் இயக்கப்பட்ட இலகுரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இரத்மலான விமானப் பயிற்சி பாடசாலையின் பயிற்சி விமானி ஒருவர் சற்று முன்னர் செஸ்னா -152 விமானத்தை தரையிறக்க முயன்ற போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் விமானம் சேதம் அடைந்துள்ள போதும், விமானி காயமின்றி தப்பியுள்ளார். விபத்தைத் தொடர்ந்து இரத்மலான விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானத்தை அகற்றி, ஓடுபாதையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு […]

பிரான்ஸ்,சவுதி இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து கைச்சாத்து ஐரோப்பா செய்தி

பிரான்ஸ்,சவுதி இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • August 25, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் (MBS) ஆகியோருக்கு இடையில் எலிசி (Elysee) மாளிகையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றது. இதனையடுத்து பாரிஸுக்கு அருகில் 6 பில்லியன் யூரோ ($7 பில்லியன்) செலவில் பிரம்மாண்ட கேளிக்கை பூங்கா ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை பிரான்ஸும் சவுதி அரேபியாவும் அறிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மேக்ரான் மற்றும் பட்டத்து இளவரசர் எம்.பி.எஸ் முன்னிலையில் […]

இலங்கை செய்தி

‘எல் நினோ தாக்கம்’ – இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • August 25, 2026
  • 0 Comments

தீவிரமடைந்து வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன, அடுத்த ஆறு மாதங்களுக்கான தரவுகளை ஆய்வு செய்ததில், இக்காலகட்டத்தில் வழக்கமான பருவகால சராசரியை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார். வழக்கமாக நாட்டின் வருடாந்த மழைவீழ்ச்சியில் 30% […]

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை இன்று மேற்கொள்கிறார். இந்தியா உலகம் செய்தி

‘வெளிநாட்டு முதலீடுகள் குறிவைப்பு’ – இந்திய நிதி அமைச்சர் அமெரிக்கா, கனடாவுக்கு பயணம்

  • August 25, 2026
  • 0 Comments

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை இன்று மேற்கொள்கிறார். இருதரப்பு பொருளாதாரம் மற்றும் நிதிப் கூட்டாண்மையை வலுப்படுத்துதல், முதலீட்டுத் தொடர்புகளை ஆழப்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தியே அவரது இவ்விஜயம் அமையவுள்ளது. தனது டொராண்டோ பயணத்தின் போது, கனடா நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பேனுடன் (François-Philippe Champagne) நடைபெறும் முதலாவது ‘பொருளாதார மற்றும் நிதி உரையாடலில்’ நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார். இந்த உரையாடல் மேக்ரோ பொருளாதாரம், நிதித்துறை ஒத்துழைப்பு, இருதரப்பு முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் […]

வரலாற்றில் இல்லாத உச்சம்: புதிய சாதனை அளவை எட்டியது உலகக் கடல் வெப்பநிலை உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வரலாற்றில் இல்லாத உச்சம்: புதிய சாதனை அளவை எட்டியது உலகக் கடல் வெப்பநிலை

  • August 25, 2026
  • 0 Comments

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிரமடைந்து வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் பெருங்கடல்களின் வெப்பநிலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ‘கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை’ (Copernicus) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, துருவப் பகுதிகளைத் தவிர்த்து பூமியின் பிற கடல்களின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை கடந்த சனிக்கிழமை 21.1 டிகிரி செல்சியஸை (70F) எட்டியுள்ளது. இது இதற்கு முன்னர் […]

தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சந்திப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தியா செய்தி

டெல்லியில் கனமழை ;166 விமானங்கள் தாமதம்

  • August 25, 2026
  • 0 Comments

தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சந்திப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக அங்கு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, பிரதான சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் தேங்கிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது; 166 விமானங்கள் […]

முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் பாடல்கள் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ இசைப் தரவரிசைப் பட்டியல்களில் (Music Charts) இடம்பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் AI பாடல்களுக்குத் தடை

  • August 25, 2026
  • 0 Comments

முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் பாடல்கள் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ இசைப் தரவரிசைப் பட்டியல்களில் (Music Charts) இடம்பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, பாடல்கள் தகுதி பெற அவை “பெரும்பாலும் மனிதர்களின் கலைப்படைப்பாக” இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய பதிவுத்துறை சங்கம் (ARIA) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கலைத்துறையின் மனித இயல்பை ஊக்குவிக்கவே” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிஜே (DJ) ஜோஷ் பவாஸ் என்பவர், […]