உலகம்

நீண்ட நாட்களுக்கு பின் தாய்லாந்தில் நங்கூரமிடப்படும் ஆபிரகாம் லிங்கன் கப்பல்

மத்திய கிழக்கில் நீண்டகாலம் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், அடுத்த வாரம் தாய்லாந்தில் நங்கூரமிடும் என்று தாய்லாந்து அதிகாரி ஒருவர் இன்று அறிவித்தார்.

ஆகஸ்ட் 22 அன்று மத்திய கிழக்கிலிருந்து புறப்பட்ட  குறித்த கப்பல், 200 நாட்களுக்கும் மேலாக எந்தத் துறைமுகத்திற்கும் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடலில் தொடர்ச்சியாக அதிக நாட்கள் இருந்ததற்கான நவீனகால சாதனையாகும் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

5000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் காணப்படும் குறித்த கப்பல் தற்போது தன்னுடைய நீண்ட பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை இதற்கு முன்னதாக குறித்த கப்பலில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியாளர்களுக்கு போதிய உணவு இல்லை என்றும், அவர்களின் மன நலம் குறித்தும் கவலை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்