இலங்கை

பிறவிக்குறைப்பாடுகளால் அதிகரிக்கும் சிசு மரணங்கள் : கருகலைப்பு சட்டத்தை மறுசீரமைக்க கோரிக்கை!

  • June 5, 2026
  • 0 Comments

இலங்கையில் 40 சதவீத  சிசு மரணங்கள் பிறவிக் குறைபாடுகளால் ஏற்படுவதாக சமூக சுகாதார நிபுணர்கள் கல்லூரியின் பேராசிரியர் கபில ஜெயரத்ன தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும்  சுமார் 2100 குழந்தைகள் இந்நிலை காரணமாக உயிரிழப்பதாகவும், வருடத்திற்கு  4,000 முதல் 5,000 வரையிலான குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கருப்பையிலேயே சில பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிய முடியும் என்றாலும், நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் […]

உலகம் முக்கிய செய்திகள்

வடகொரியாவின் முக்கிய அறிவிப்பு : விரைந்து செல்லும் சீன ஜனாதிபதி!

  • June 5, 2026
  • 0 Comments

சீனத் தலைவர் ஷி ஜின்பிங் அடுத்த வாரம் வட கொரியாவிற்குப் பயணம் மேற்கொள்வார் என இரு நாடுகளும் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளன. வரும் திங்கட் கிழமை வடகொரியா செல்லும் ஷி  ஜின்பிங், செவ்வாய்க்கிழமை வரை அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என இரு நாடுகளின் அரசு ஊடகங்களும் சுருக்கமான செய்திகளில் தெரிவித்துள்ளன. அணு ஆயுதங்களைக் கொண்ட தனது அண்டை நாடான வட கொரியாவுடன் நெருங்கிய உறவுகளை வலுப்படுத்த சீனா எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக […]

உலகம்

 இந்தோனேசியாவில் இலவச உணவு விநியோகத்தில் ஊழல்: 08 கோடி குழந்தைகள் பாதிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் ஊட்டச்சத்து திட்டங்களின் கீழ் தினமும் 08 கோடி குழந்தைகளுக்கு உணவளிப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி சந்கேத்திற்கு இடமின்றி மீறப்பட்டுள்ளதும், இந்த திட்டத்தின் கீழ் மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுகளை உட்கொண்ட பெரும்பாலான குழந்தைகள் சுகவீனம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய திட்டத்தை மேற்பார்வையிடும் தேசிய ஊட்டச்சத்து முகமையின் தலைவர் டாடான் ஹிண்டயானா (Dadan Hindayana) அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி தன்னை வளப்படுத்திக் கொண்டதன் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதே குற்றச்சாட்டுகளின் […]

செய்தி விளையாட்டு

ஆஸி.அணியை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!

  • June 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று, 3 போட்டிகளைக் கொண்ட தொடரை 2 – 1 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1-1 என வென்று தொடரில் சமனிலை வகித்தன. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி லாகூரில் நேற்று நடைபெறுகிறது. நாணய சுழற்சியில் வென்ற […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

கொழும்பின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று இரவு 08.00 மணிவரை தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தலேயிலிருந்து கொலன்னாவாவிற்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதான விநியோகக் குழாயில் ஏற்பட்ட அவசரகால பழுது காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது. அதன்படி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபேசேகரபுர மற்றும் கொலன்னாவா மாநகர சபையின் கீழ் உள்ள பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளின் சாமர்த்தியம்!! பில்லியன் கணக்கில் சேமிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்துள்ள சூரியசக்தித் திட்டங்கள் 2026-ஆம் ஆண்டில் பில்லியன் கணக்கான செலவீனங்களை தடுத்து சேமித்துள்ளதாக புதிய பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஈரான் மீதான போர் நடவடிக்கை எரிவாயு விலைகளை மிக அதிகமாக வைத்திருபதுடன், புதைபடிவ எரிபொருள் இறக்குமதியின் செலவுகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த சூரிய திட்டம் (சோலார் சேமிப்பு திட்டம்) ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு கைக்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு திட்டம் மூலம் ஒரு நாளைக்கு  சராசரியாக €136 மில்லியன் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி ஜுன் 02 […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!

  • June 5, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக TVK அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (05) நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. அமைச்சரவையில் முதல்வர் விஜய் உட்பட மொத்தம் 35 பேர் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இந்திய நேரப்படி இன்று முற்பகல் 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் […]

செய்தி விளையாட்டு

ODI தொடரை வெல்லும் முனைப்புடன் இலங்கை களத்தில்!

  • June 5, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் ()7) நடைபெறவுள்ளது. ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இப்போட்டி இடம்பெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இப்போட்டியில நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் […]

ஐரோப்பா

நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு : முதல் முறையாக புட்டினுக்கு கடிதம் அனுப்பிய ஜெலென்ஸ்கி!

  • June 5, 2026
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பில் ஒரு உடன்பாடு எட்டப்பட வேண்டுமானால் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்த வழி என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதிய அவர்,நேரடி சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2022-ல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைன் ஜனாதிபதி புட்டினுக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியது இதுவே முதல் முறை. இப்போது தேர்வு உங்களுடையது. போர் போதும். இந்தப் […]

அரசியல் இலங்கை செய்தி

“புலிகள் அமைப்பின் கொள்கைகளை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது” – நாமல்

  • June 5, 2026
  • 0 Comments

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களின் போது, தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கருப்பொருள் கொண்ட பாடல்களைப் பயன்படுத்திய போதும், பகிர்ந்துகொண்ட போதும் ஏன் அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்பதை அரசு விளக்க வேண்டும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் பாடகர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பாடலைப் […]