இலங்கை

பிறவிக்குறைப்பாடுகளால் அதிகரிக்கும் சிசு மரணங்கள் : கருகலைப்பு சட்டத்தை மறுசீரமைக்க கோரிக்கை!

இலங்கையில் 40 சதவீத  சிசு மரணங்கள் பிறவிக் குறைபாடுகளால் ஏற்படுவதாக சமூக சுகாதார நிபுணர்கள் கல்லூரியின் பேராசிரியர் கபில ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும்  சுமார் 2100 குழந்தைகள் இந்நிலை காரணமாக உயிரிழப்பதாகவும், வருடத்திற்கு  4,000 முதல் 5,000 வரையிலான குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருப்பையிலேயே சில பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிய முடியும் என்றாலும், நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தான் இறக்கப் போகிறோம் என்பதை நன்கு அறிந்த ஒரு குழந்தையைக் கருப்பையில் வைத்திருப்பதால் தாய், குழந்தை, சுகாதார அமைப்பு, குடும்பம் மற்றும் சமூகம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. இது மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு நிலை.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், தாய் விரும்பினால், கருக்கலைப்பு செய்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்