கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு!
கொழும்பின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று இரவு 08.00 மணிவரை தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலேயிலிருந்து கொலன்னாவாவிற்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதான விநியோகக் குழாயில் ஏற்பட்ட அவசரகால பழுது காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.
அதன்படி, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, நாவல, ஒபேசேகரபுர மற்றும் கொலன்னாவா மாநகர சபையின் கீழ் உள்ள பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.





