ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளின் சாமர்த்தியம்!! பில்லியன் கணக்கில் சேமிப்பு!

ஐரோப்பிய நாடுகள் முன்னெடுத்துள்ள சூரியசக்தித் திட்டங்கள் 2026-ஆம் ஆண்டில் பில்லியன் கணக்கான செலவீனங்களை தடுத்து சேமித்துள்ளதாக புதிய பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான போர் நடவடிக்கை எரிவாயு விலைகளை மிக அதிகமாக வைத்திருபதுடன், புதைபடிவ எரிபொருள் இறக்குமதியின் செலவுகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இந்த சூரிய திட்டம் (சோலார் சேமிப்பு திட்டம்) ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவு கைக்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சேமிப்பு திட்டம் மூலம் ஒரு நாளைக்கு  சராசரியாக €136 மில்லியன் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி ஜுன் 02 ஆம் திகதிவரையான காலப்பகுதிவரை  €12.8 பில்லியன் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025-ல், புதைபடிவ எரிபொருட்களை விட காற்று மற்றும் சூரிய ஆற்றல் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்முறையாக அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது தூய்மையான மின்சாரத்திற்கான மாற்றத்தில் ஒரு “முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!