இந்தோனேசியாவில் இலவச உணவு விநியோகத்தில் ஊழல்: 08 கோடி குழந்தைகள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் ஊட்டச்சத்து திட்டங்களின் கீழ் தினமும் 08 கோடி குழந்தைகளுக்கு உணவளிப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதி சந்கேத்திற்கு இடமின்றி மீறப்பட்டுள்ளதும், இந்த திட்டத்தின் கீழ் மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவுகளை உட்கொண்ட பெரும்பாலான குழந்தைகள் சுகவீனம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய திட்டத்தை மேற்பார்வையிடும் தேசிய ஊட்டச்சத்து முகமையின் தலைவர் டாடான் ஹிண்டயானா (Dadan Hindayana) அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி தன்னை வளப்படுத்திக் கொண்டதன் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே குற்றச்சாட்டுகளின் பேரில் மேலும் இரண்டு முன்னாள் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவின் தரம் மற்றும் நிர்வாக குறைப்பாடு குறித்த கவலைகள் காரணமாக ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ (Prabowo Subianto ) டாடானைப் பணிநீக்கம் செய்த 24 மணி நேரத்திற்குள் இந்தக் கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் ஹலால் சான்றிதழ் கொள்முதலில் மட்டும் கிட்டத்தட்ட 50 மில்லியன் டொலர் (39 மில்லியன் பவுண்டுகள்) நிதி ஒதுக்கீட்டு முரண்பாடுகள் இருப்பதாக அந்நாட்டின் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.





