இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று!

தமிழக வெற்றிக் கழக TVK அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (05) நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

அமைச்சரவையில் முதல்வர் விஜய் உட்பட மொத்தம் 35 பேர் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இந்திய நேரப்படி இன்று முற்பகல் 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக TVK அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் மக்கள் மத்தியில் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!