இந்தியா

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முதல் போராட்டம் : டெல்லியில் அணிதிரண்ட இளைஞர்கள்!

  • June 7, 2026
  • 0 Comments

சமீபத்தில் இணையத்தில் வைரலான ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புது டெல்லியின் ஜந்தர் மந்தரில் நேற்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கரப்பான்பூச்சியின் முகமூடியை அணிந்து பதாதைகளை ஏந்தியிருந்தனர். இந்தியாவின் கல்வி முறை மற்றும் குறைந்த வேலை வாய்ப்புகள் மீதான விரக்தியை வெளிப்படுத்தும் நோக்கில் மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா செய்தி

1 மில்லியன் பவுண்ட் லாட்டரி வென்ற குடும்பத் தலைவர் விபத்தில் பலி!

  • June 7, 2026
  • 0 Comments

பிரிட்டனின் Essex மாகாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த, மில்லியன் பவுண்டுகள் லாட்டரி வென்ற அதிர்ஷ்டசாலி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது Hit and Run (மோதிவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தப்பி ஓடுதல்) விபத்தாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கடந்த மே 21ஆம் திகதி காலை 6:30 மணியளவில், Tiptree பகுதியில் மிதிவண்டியில் (Bicycle) சென்று கொண்டிருந்த நபர் மீது கறுப்பு நிற Ford Ka ரக கார் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 30 வயது […]

ஐரோப்பா

சோவியத் காலத்து ஆயுதங்களை பழுதுபார்க்க ரஷ்யாவின் உதவியை நாடிய தலிபான்கள்!

  • June 7, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் ஆயுதக் கிடங்குகளை  பழுதுபார்க்க தலிபான்கள் ரஷ்யாவின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ரஷ்யா ஆதரவு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களுடன் செய்துக்கொள்ளப்பட்ட இராணுவ  ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கடந்த வாரம் மொஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மன்றத்தில் கையெழுத்தானது. இதற்கமைய 1989 ஆம் ஆண்டில் சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு  வெளியேறியபோது கைவிட்டுச் சென்ற  நூற்றுக்கணக்கான பழைய டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் இராணுவ வாகனங்களை தலிபான்கள் பழுதுபார்க்கவுள்ளனர். தலிபான் […]

உலகம்

கடல் வழியாக வரும் ஆபத்துக்கள் : ஐரோப்பிய தலைலவர்களுக்கு சவால் விடுத்த ஹெக்ஸெத்!

  • June 7, 2026
  • 0 Comments

கடல் வழியாக வரும் “ஆபத்துக்களை ஐரோப்பா எதிர்நோக்கி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார். அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் படைகள் நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து மேற்கு ஐரோப்பாவை விடுவித்த 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஐரோப்பாவின் பலவீனமான பாதுகாப்பு, குடியேற்றத்தை நிர்வகிப்பதில் உள்ள இயலாமை உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டினார். அத்துடன் கடல்வழி படையெடுப்புகளை எதிர்கொள்ளுமாறு ஐரோப்பிய […]

உலகம் செய்தி

சொந்த கட்சிக்குள்ளேயே ட்ரம்புக்கு வலுக்கிறது எதிர்ப்பு!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அலைகள் தீவிரமடைந்து வருகின்றன. இதுவரை டிரம்பை எதிர்க்கத் தயங்கி வந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது ட்ரம்பின் முடிவுகளுக்கு எதிராகத் துணிச்சலாகப் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரு அவைகளையும் சேர்ந்த குடியரசுக் கட்சியினரின் பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து டிரம்பின் அதிரடி முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன. மேலும், உக்ரைனுக்கு […]

உலகம்

மோசடிகளை நுட்பமாக்கும் செயற்கை நுண்ணறிவு – 900 மில்லியன் டொலர்கள் இழப்பு!!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் இடம்பெறும் மோசடிகளால் மக்கள் 900 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் FBI-யின் இணையக் குற்ற முறைப்பாட்டு மையத்திற்கு 22,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மோசடிகளை மேலும் நுட்பமாக்கி வருகிறது. குறிப்பாக மோசடியாளர்கள் ஏமாற்று வேலைகளை செய்வதற்கான திறனை வலுப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போலி ஆட்கடத்தல் மற்றும் காதல் மோசடி வழக்குகள் பெறுகி வருவதாகவும், இதற்காக  மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, குடும்ப […]

செய்தி விளையாட்டு

பாலஸ்தீன வீரர்களின் மரணத்திற்கு விளையாட்டு சீருடைகளை வைத்து அஞ்சலி!

  • June 7, 2026
  • 0 Comments

இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்த பாலஸ்தீன கால்பந்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கால்பந்து மைதானத்திற்கு வெளியே நடைபெற்றது. Red Card Glasgow என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வில், உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் பூங்கொத்துகள் மற்றும் விளையாட்டு சீருடைகள் அங்கு வைக்கப்பட்டன. ஹாம்டன் பார்க் மைதானத்தில் ஸ்காட்லாந்து மற்றும் இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற அதே நேரத்தில் இந்த அமைதிப் போராட்டம் அரங்கேறியது. இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் […]

இந்தியா செய்தி

சொத்துக்காக நேர்ந்த கொடூரம்: ஆஸ்திரேலிய கணித ஆசிரியர் இந்தியாவில் படுகொலை

  • June 7, 2026
  • 0 Comments

இந்தியாவில் கடந்த மாதம் மாயமான ஆஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர கணித ஆசிரியர் சுனில் சர்மா, அவரது சகோதரராலேயே படுகொலை செய்யப்பட்டு, கால்வாய் ஒன்றில் உடல் வீசப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 66 வயதான சுனில் சர்மா, தனது பணி ஓய்வுக் காலத்தைத் திட்டமிட்டு வந்த நிலையில், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகருக்குச் சென்றிருந்தார். அங்கு தனக்குச் சொந்தமான முதலீட்டு நோக்கம் கொண்ட சொத்து ஒன்றை விற்பனை செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதே, கடந்த […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்பாடு: தமிழரசுக் கட்சி போர்க்கொடி!

  • June 7, 2026
  • 0 Comments

சொல்லிசைப் பாடகர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வன்மையாகக் கண்டித்துள்ளார். சந்திவெளி ‘எக்கோ’ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- ” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்படப் பலர், கடந்த காலங்களில் பயங்கரவாதத் […]

செய்தி விளையாட்டு

SL vs WI: மழை காரணமாக போட்டி ரத்து!

  • June 7, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. சபினா பூங்காவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, தொடர் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்த போதிலும், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ள போதிலும், […]