ஐரோப்பா செய்தி

1 மில்லியன் பவுண்ட் லாட்டரி வென்ற குடும்பத் தலைவர் விபத்தில் பலி!

பிரிட்டனின் Essex மாகாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த, மில்லியன் பவுண்டுகள் லாட்டரி வென்ற அதிர்ஷ்டசாலி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது Hit and Run (மோதிவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தப்பி ஓடுதல்) விபத்தாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கடந்த மே 21ஆம் திகதி காலை 6:30 மணியளவில், Tiptree பகுதியில் மிதிவண்டியில் (Bicycle) சென்று கொண்டிருந்த நபர் மீது கறுப்பு நிற Ford Ka ரக கார் மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் Anthony Canty – 39 என விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாவார்.

கோவிட்-19 பொது முடக்கக் காலத்தின் போது, பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த காவல்துறை அதிகாரி ஒருவருக்கு முதலுதவி (CPR) அளித்து, அவரது உயிரைக் காப்பாற்றியதால் பிரித்தானிய ஊடகங்களில் இவர் ‘ஹீரோவாக’க் கொண்டாடப்பட்டார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்த சில வாரங்களிலேயே, 2020 மே மாதத்தில், இவருக்கு EuroMillions லாட்டரி குலுக்கலில் 1 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.

லாட்டரி பரிசை வென்ற பிறகும், “எனது அன்றாட வேலையைக் கைவிடப் போவதில்லை” என அவர் அப்போது குறிப்பிட்டமை பலரது பாராட்டுகளையும் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

விபத்து நடந்த Maldon வீதியிலிருந்து, விபத்தை ஏற்படுத்திய கார் நிறுத்தப்படாமல் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீதான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி