ஐரோப்பா

நோவாக்கின் மரணத்தை புலம்பெயர்ந்தோருடன் தொடர்புப்படுத்தி பேசிய வான்ஸ் : கொதித்தெழுந்த டவுனிங் தெரு!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் , ஹென்றி நோவாக்கின் கொலையை ஐரோப்பாவில் புலம் பெயர்ந்தோர் படையெடுப்புடன் தொடர்புப்படுத்தி பேசியமைக்கு பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் ஜே.டி வான்ஸை தொலைபேசி வழியாக தொடர்புக்கொண்ட அவர், நோவாக்கைக் கொன்றவர் ஒரு பிரித்தானியர் என்றும், இந்தத் துயரச் சம்பவம் பெரும் குடியேற்றத்துடன் தொடர்பில்லாதது என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும், தங்கள் மகனின் மரணம் பிளவுகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடாது என்ற நோவாக் குடும்பத்தின் விருப்பத்தையும் அவர் வலியுறுத்தினார். […]

இலங்கை

ஓமந்தையில் கொலையில் முடிந்த மோதல் : ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!

  • June 7, 2026
  • 0 Comments

வவுனியா – ஓமந்தை பகுதியில் கோயிலின் கதவை அத்துமீறி திறக்க முயன்ற குழுவினருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் கொலையில் முடிந்துள்ளது. வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது. இதற்கு அந்த இடத்தில் இருந்த பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த பெண் மீது அக்குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அப் பெண்ணின்  மகன் […]

உலகம்

வெள்ளை மாளிகையின் AI ஆலோசகர் ஸ்ரீராம் கிருஷ்ணன் பதவி விலகுவதாக அறிவித்தார்!

  • June 7, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகையின் உயர்மட்ட செயற்கை நுண்ணறிவு கொள்கை ஆலோசகரான ஸ்ரீராம் கிருஷ்ணன் இன்று தனது பதவி விலகளை அறிவித்துள்ளார். இந்த மாத்தின் இறுதியில் அவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னோடி தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளை வகுப்பதிலும், செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறைக்கான ஒரு தேசிய கட்டமைப்பை உருவாக்குவதிலும் ஸ்ரீராம் கிருஷ்ணன் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் பங்குகளை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை   ஆராய்ந்து வரும் முக்கியமான தருணத்தில் அவர் தனது பதவி விலகளை […]

உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் 30 நாள் காலக்கெடு விதிக்கலாம்!

  • June 7, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க 30 நாள் காலக்கெடுவை ஈரான் விதிக்கக்கூடும் என்று அந்நாட்டின் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதிகாரியான மஜித் ஷாகேரி (Majid Shakeri,) தெரிவித்துள்ளார். ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்த பேட்டியில்  “இந்த முன்மொழிவின்படி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அனைத்து அச்சுறுத்தல்களும் நீக்கப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகே, ஈரானிய நிர்வாகத்தின் கீழ் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது சாத்தியமாகும் என்று தெஹ்ரான் அறிவிக்கலாம் […]

உலகம்

இஸ்ரேலின் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு – ஆபத்தான நிலையில் இருவர்!

  • June 7, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் இன்றைய தினம் பல துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 35 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்ததாக இஸ்ரேலின் அவசர சேவையான மாகன் டேவிட் அடோம் ( Magen David Adom) தெரிவித்துள்ளது. மேலும் இருவர் ஆபத்தான உடற்காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். இதேவேளை தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,  மற்றொரு நபரை தேடும் […]

ஐரோப்பா

ஈரானிய பிரஜை ஒருவரை நாடு கடத்த பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

  • June 7, 2026
  • 0 Comments

ஈரானில் உளவு குற்றச்சாட்டின் பேரில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரிட்டிஷ் தம்பதிகளான கிரேக் மற்றும் லிண்ட்சே ஃபோர்மேன் தம்பதிகள் தங்களை பின்தொடர்ந்த ஈரானியரான ரிச்சர்ட் ஜானை ( Richard Jan) நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். இரட்டைக் குடியுரிமை பெற்றவரான ரிச்சர்ட் ஜான், 2010 முதல் நாடு கடத்தப்படுவதற்குத் தகுதி பெற்றிருந்தபோதிலும், உடல்நிலை மோசமடைந்து வருவதால், 23 ஆண்டுகளாக இங்கிலாந்தின் அதி உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜானை நாடு கடத்துவதை ஃபோர்மேன் […]

உலகம்

பிஜி தீவில் நிலநடுக்கம்!

  • June 7, 2026
  • 0 Comments

தெற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று   5.4  ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 506.6 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பசுபிக் நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவுகள் அமைந்துள்ளமையால் அப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது சாதாரணமான ஒரு விடயமாகும்.  

இலங்கை

தனியார் பேருந்துகளின் சேவையை 50 சதவீதம் குறைக்க நடவடிக்கை!

  • June 7, 2026
  • 0 Comments

எரிபொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களின் விலையை அதிரிக்க தனியார் போக்குவரத்து சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனியார் பேருந்துகளின் சேவையை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நுகேகொடையில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,  பேருந்துகளை நட்டத்துடன் தொடர்ந்து இயக்க முடியாது என்பதால், பேருந்து கால அட்டவணைகளை […]

உலகம்

ஓஹியோவில் இடம்பெற்ற திருவிழாவில் துப்பாக்கிச்சூடு! 12 பேர் காயம்!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள டோலிடோவ் பகுதியில் இடம்பெற்ற திருவிழாவில் பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது 12 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் தாக்குதல்தாரியை தேடி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான 10 பேர் நலமாக உள்ளதாகவும், 02 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் டோலிடோவ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளிடம் காவல்துறை பேசி வருவதாகவும், கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, தாக்குதல்தாரியை கைது செய்ய பொலிஸார் […]

உலகம்

கச்சா எண்ணெயின் விலை 300 டொலருக்கு சென்றிருக்க வேண்டும்!! மக்களை சமாளிக்கும் ட்ரம்ப்!

  • June 7, 2026
  • 0 Comments

இந்த கிரகத்திலேயே அதிக கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிடம்தான் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றங்களால் அமெரிக்காவில் எரிபொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இது மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,  அமெரிக்காவிற்கு யாருக்கும் தெரியாத பல ரகசிய வழிகளில் இருந்து எண்ணெய் வந்து கொண்டிருக்கிறது என்றும், அவற்றில் சிலவற்றைத் தான் வெளியில் பகிரங்கமாகச் சொல்ல […]