உலகம்

கடல் வழியாக வரும் ஆபத்துக்கள் : ஐரோப்பிய தலைலவர்களுக்கு சவால் விடுத்த ஹெக்ஸெத்!

கடல் வழியாக வரும் “ஆபத்துக்களை ஐரோப்பா எதிர்நோக்கி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் படைகள் நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து மேற்கு ஐரோப்பாவை விடுவித்த 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஐரோப்பாவின் பலவீனமான பாதுகாப்பு, குடியேற்றத்தை நிர்வகிப்பதில் உள்ள இயலாமை உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கடல்வழி படையெடுப்புகளை எதிர்கொள்ளுமாறு ஐரோப்பிய தலைவர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் தரை மற்றும் கடல்வழிசார் பாதுகாப்பு விடயங்களில் பெரும்பாலும் அமெரிக்காவை சார்ந்துள்ள நிலையில் ஹெக்ஸெதின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்