உலகம்

செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களுக்குத் தடை! பதற்றத்தை எதிர்கொள்ள தயார்!! ஹூதிகள் முழக்கம்!

  • June 8, 2026
  • 0 Comments

செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று ஹூதி கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர். ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், உறுதிப்படுத்தியுள்ளனர். “எங்கள் மக்கள் மீதான இந்த அநியாயமான முற்றுகையின் முன் நாங்கள்  அமைதியாக இருக்க மாட்டோம்,” என்று அந்த அமைப்பு இன்று காலை அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்படி அறிக்கையில், ஜாஃபா துறைமுக நகரில் உள்ள “இஸ்ரேலின் முக்கிய இலக்குகள்” மீது ஏவுகணைகளை வீசியதாகவும், அந்த ஏவுகணைகள் அதன் […]

உலகம் செய்தி

போர் பதற்றம்: எகிறியது எண்ணெய் விலை: சரிந்தது பங்கு சந்தை!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் மீண்டும் போர் வெடித்துள்ளதால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் US-traded crude எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் 4 சதவீதத்திற்கும் மேலாக கணிசமாக உயர்ந்துள்ளன. அதேவேளை, போர் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ள நிலையில், ஆசியப் பங்குச் சந்தைகள் திங்களன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தன. குறிப்பாக, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது. சர்வதேச சந்தை வல்லுநர்கள் இந்த ராணுவ […]

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 15 பேர் பலி! 129 பேர் காயம்!

  • June 8, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 129 பேர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக Soccsksargen பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இப்பகுதியில் நான்கு மாகாணங்களும் ஒரு நகரமும் உள்ளடங்கியுள்ளன. பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மூவர் பலி!

இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்காக கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்!

  • June 8, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று (09) சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட அரசியல் வாதிகளும், தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். சுரேஷ் சாலே நாட்டுக்காக சேவையாற்றியவர், புலி டயஸ்போராக்களின் தேவைக்காக அவர் பழிவாங்கப்படுகின்றார் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: தோல்வியை நோக்கி அமைதி முயற்சி!

  • June 8, 2026
  • 0 Comments

இஸ்ரேல், ஈரானுக்கிடையில் மீண்டும் ஏற்பட்டுள்ள தீவிரமான போர் பதற்றமானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால், அமைதி முயற்சி தோல்வியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இஸ்ரேலை ஈரான் இலக்கு வைத்துள்ளது எனக் கூறப்படுகின்றது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ஈரான்மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்தபோதிலும், […]

அரசியல் இலங்கை செய்தி

” புலிகள் குறித்து துல்லியமான உளவு தகவல் வழங்கியவரே சுரேஷ் சலே” – கூட்டு எதிரணி புகழாரம்!

  • June 8, 2026
  • 0 Comments

“புலிகள் அமைப்பினர் குறித்து துல்லியமான உளவுத் தகவல்களை வழங்கிய அதிகாரியே சுரேஷ் சலே. எனவே, அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்நாட்டின் தேசப்பற்றாளர்கள் வீதிக்கு இறங்குவார்கள். ” – இவ்வாறு கூட்டு எதிரணி உறுப்பினரும், கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளருமான் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ சுரேஷ் சலேவுக்கு சுகாதார உணவு வழங்கப்படவில்லை. சோறும், ஒரு கறியுமே வழங்கப்படுகின்றது. மலசலக்கூடம் செல்லமுடியவில்லை. எவரேனும் அவரை சந்திக்க […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சூனியக்காரியாக மாறிய ஆஸ்திரேலிய அரசியல் பிரபலம்: வலுக்கிறது எதிர்ப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா விக்டோரியா மாநில பிரீமியர் Jacinta Allan னை இழிவுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு நடமாடும் விளம்பரப் பலகையை ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர். இந்த விளம்பரங்களில் முதல்வரை மந்திரவாதி போல் சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவுப் படங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லார்ட் ஆகியோர் இந்தச் செயலை பாலினப் பாகுபாடு கொண்டதாகவும் பொது வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் கருதுகின்றனர். அரசியல் தலைவர்களுக்கு […]

ஐரோப்பா கல்வி

ரஷ்யா, உக்ரைன் நேரடிப் பேச்சு: ஐரோப்பிய தலைவர்கள் ஆதரவு!

  • June 8, 2026
  • 0 Comments

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் நேரடிப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பிற்கு பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். உக்ரைன் ஜனாதிபதியுடன் மேற்படி நாடுகளின் தலைவர்கள் லண்டனில் நடத்திய சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ” போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும் அடுத்தகட்ட பேச்சுகளுக்கு ஆதரவளிக்கவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தீவிரப் பங்களிப்புடன் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நேரடி உரையாடலை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை தலைவர்கள் […]

உலகம் செய்தி

ஈரான்மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் இஸ்ரேல்!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களை அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதவர் Yechiel Leiter நியாயப்படுத்தியுள்ளார். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிராந்தியத்தில் ஈரானின் தலையீட்டை அண்டை நாடுகள் எதிர்ப்பதாகக் குறிப்பிடும் அவர், ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை “சுயமரியாதை உள்ள எந்தவொரு நாடும்” பொறுத்துக் கொள்ளாது […]

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மூவர் பலி!

  • June 8, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் கடற்கரைப் பகுதியில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மூவர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர் என்பது தற்போதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவாகியுள்ளன, மேலும் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 7:37 மணிக்கு மிண்டனாவோ தீவில் உள்ள கடலோர நகரமான ஜெனரல் சாண்டோஸிற்கு தென்மேற்கே சுமார் 13 […]