உலகம்

செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களுக்குத் தடை! பதற்றத்தை எதிர்கொள்ள தயார்!! ஹூதிகள் முழக்கம்!

செங்கடலில் இஸ்ரேலிய கப்பல்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று ஹூதி கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் ஆதரவு பெற்ற ஏமன் ஹூதிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், உறுதிப்படுத்தியுள்ளனர்.

“எங்கள் மக்கள் மீதான இந்த அநியாயமான முற்றுகையின் முன் நாங்கள்  அமைதியாக இருக்க மாட்டோம்,” என்று அந்த அமைப்பு இன்று காலை அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்படி அறிக்கையில், ஜாஃபா துறைமுக நகரில் உள்ள “இஸ்ரேலின் முக்கிய இலக்குகள்” மீது ஏவுகணைகளை வீசியதாகவும், அந்த ஏவுகணைகள் அதன் நோக்கங்களை அடைந்தது” என்றும்  கூறியுள்ளனர்.

அத்துடன் செங்கடலில் எதிரிகளின் கப்பல் போக்குவரத்திற்கு முழுமையான தடை விதிக்கிறோம், மேலும் எந்தவொரு சியோனிச இயக்கங்களும் எங்கள் படைகளின் இராணுவ இலக்குகளாகக் கருதப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்