உலகம் முக்கிய செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இரு ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

  • June 8, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து  பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம் செய்தி

ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்: மீண்டும் போர் பதற்றம்!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரானின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ இலக்குகளின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் அல்லது இலக்குகளின் துல்லியமான இடங்கள் குறித்த மேலதிகத் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த மோதலைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் தனது அனைத்து விமானச் சேவைகளையும் காலவரையறையின்றி நிறுத்தி வைத்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வான்வழித் தாக்குதல் முக்கியமான […]

இலங்கை செய்தி

கணவருக்காக களமிறங்கிய சுரேஷ் சலேவின் மனைவி!

  • June 8, 2026
  • 0 Comments

“எனது கணவர் அப்பாவி, இந்நாட்டுக்காக 38 வருடங்கள் சேவையாற்றியவர். எனவே, அவருக்காக நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலே தெரிவித்தார். சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கணவரை நேற்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ சுரேஷ் சலே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை […]

உலகம்

தெஹ்ரானில் விமான சேவைகள் இடைநிறுத்தம்!

  • June 8, 2026
  • 0 Comments

தெஹ்ரானில் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தெஹ்ரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திற்கான அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையம் நீண்ட காலமாக மூடப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம்  திறக்கப்பட்டிருந்த நிலையில் மீளவும் மூடப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

பாதுகாப்பு தீவிரம்: விசேட அதிரடிப்படை களமிறக்கம்!

  • June 8, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளிலேயே இவ்வாறு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிஐடியினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

புங்குடுதீவு கடலில் காணாமல்போன 3 மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு!

  • June 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியிலிருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்த மூன்று மீனவர்களும் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இந்த மூன்று மீனவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை கடற்றொழிலுக்குச் சென்றிருந்த நிலையில், கரை திரும்பாமல் காணாமல்போயிருந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களைத் தேடும் பணிகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. கடற்றொழில் அமைச்சரின் நேரடிப் பணிப்புரைக்கு அமைவாக, கடற்படையினர் தமது படகுகள் மூலம் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய ஆழ்கடல் […]

உலகம்

இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் முக்கிய நாடுகள்!

  • June 8, 2026
  • 0 Comments

சைப்ரஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள்  இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளின் ஒரு தொகுதியை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புது டெல்லியில்  இந்திய மற்றும் சைப்ரஸ் தூதர்களுக்கு இடையே நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் இது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம்  தனது பாதுகாப்பு நிலையை வலுப்படுத்துவதற்காக பிரம்மோஸ் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதில் கிரீஸ் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிடமிருந்து சைப்ரஸ் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை வாங்குவது கிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள ஒட்டுமொத்த […]

இலங்கை முக்கிய செய்திகள்

சுரேஷ் சாலே வைத்தியசாலையில் அனுமதி!

  • June 7, 2026
  • 0 Comments

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த  அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலே இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவர்  கொழும்பு வைத்தியசாலையின்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதற்கிடையே தமது மரணம் நெருங்கிவிட்டதாக உணர்வதால், கண்களைத் தானம் செய்வதற்கும் தமது இறுதி உயில் சாசனத்தைத் தயாரிப்பதற்கும் தேவையான ஆவணங்களை உடனடியாகக் கொண்டு வருமாறு சுரேஷ் சாலே தனது சட்டதரணிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் தனது […]

உலகம்

“அதிக பகுத்தறிவுள்ளவர்” : மொஜ்தபா கமெனியை பாராட்டிய ட்ரம்ப்!

  • June 7, 2026
  • 0 Comments

ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei), தனது முன்னோடியை விட “அதிக பகுத்தறிவுள்ளவர்” என்று தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், கமெனி “மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ளார்” என்றும் அவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், இளவயதினராக இருப்பதால், அதிக பகுத்தறிவுள்ளவர் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகவும் மோசமாகக் காயமடைந்துள்ளார். எனவே, அவரிடம் ஒருவித துணிச்சல் இருக்கிறது,” […]

உலகம்

மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதல் – 06 பேர் கைது!

  • June 7, 2026
  • 0 Comments

மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட 06 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட்  (Flinders Street Station) ரயில் நிலையத்தில் நேற்று  இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறை மோதலில் சுமார் 10 பேர் ஈடுபட்ட நிலையில், அவர்களில் 06 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 17 வயது சிறுவன் ஒருவனுக்கு கையில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும்,  அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும்  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் 22 வயது இளைஞர் ஒருவர் மீது […]