உலகம் செய்தி

ஈரான்மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் இஸ்ரேல்!

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களை அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதவர் Yechiel Leiter நியாயப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மட்டுமே குறிவைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் ஈரானின் தலையீட்டை அண்டை நாடுகள் எதிர்ப்பதாகக் குறிப்பிடும் அவர், ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை “சுயமரியாதை உள்ள எந்தவொரு நாடும்” பொறுத்துக் கொள்ளாது என்று Yechiel Leiter தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரானின் வெறிபிடித்த ஆட்சிமுறை ஒட்டுமொத்த உலகத்திற்கும் வெறுப்பை ஏற்படுத்திவிட்டது ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி