ரஷ்யா, உக்ரைன் நேரடிப் பேச்சு: ஐரோப்பிய தலைவர்கள் ஆதரவு!
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் நேரடிப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பிற்கு பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதியுடன் மேற்படி நாடுகளின் தலைவர்கள் லண்டனில் நடத்திய சந்திப்பின் பின்னர் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
” போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும் அடுத்தகட்ட பேச்சுகளுக்கு ஆதரவளிக்கவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் தீவிரப் பங்களிப்புடன் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நேரடி உரையாடலை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை தலைவர்கள் ஆதரிக்கின்றனர்.” எனவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய இருநாட்டு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடே பேச்சுவார்த்தைக்கான தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும்.
சர்வதேச எல்லைகளை ஆயுத பலத்தால் மாற்றியமைக்கக் கூடாது என்றும் றிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி கடந்த வார இறுதியில் , ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எழுதிய திறந்த கடிதத்தில் நேருக்கு நேர் சந்திக்க முன்மொழிந்திருந்தார்.
ஆனால், சாத்தியமான அமைதி ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் வரை ஜெலென்ஸ்கியைச் சந்திப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று கூறி புடின் இந்த அழைப்பை நிராகரித்திருந்தார்.




