இலங்கை செய்தி

இலங்கையிலிருந்து விடைபெறும் சுவிஸ் தூதுவர் வடக்கு ஆளுநருடன் அவசர சந்திப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று (08) காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்களுக்குக் ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனால் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் தூதுவர் இதன்போது […]

ஐரோப்பா

பிரெக்ஸிட் திட்டத்தினால் ஆண்டுக்கு 30 பில்லியன் பவுண்ட்ஸ் இழப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

பிரெக்ஸிட் திட்டத்தினால் ஆண்டுக்கு 30 பில்லியன் பவுண்ட்ஸ் இழப்பு ஏற்படுவதாக முன்னாள் வெளியுறவுச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் (David Miliband)  தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதால் ஏற்படும் வருமான இழப்பு, ஐக்கிய இராச்சியம் மீது “தினமும் ஒரு கடுமையான வரியை” விதிப்பதற்குச் சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர்  பிரெக்ஸிட் வரி என்று  விவரித்துள்ளார். ‘தி பிரெக்ஸிட் எஃபெக்ட்’ (The Brexit Effect) என்ற புத்தக்கத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார […]

உலகம் செய்தி

தாக்குதலை உடன் நிறுத்தவும்! இஸ்ரேல், ஈரானுக்கு ட்ரம்ப் உத்தரவு!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் தனது பதிலடித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமைதி காக்குமாறு ட்ரம்ப் வலியுறுத்தினார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்த அறிவுறுத்தலை பின்பற்றாது ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. இந்நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறானதொரு வலியுறுத்தலை விடுத்துள்ளார்.    

உலகம் செய்தி

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புமீது ஈரான் கடும் அதிருப்தி!

  • June 8, 2026
  • 0 Comments

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA-வின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei , கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது முன்வைக்கப்படும் எந்தவொரு கண்டனத் தீர்மானத்திற்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடும், ஐக்கிய நாடுகள் சபையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையும் பிராந்தியத்தின் அமைதிப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அணுசக்தி நிலையங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான […]

உலகம்

ஜப்பானின் நகரமொன்றில் அனைத்து தொடக்கப் பாடசாலைகளையும் மூட நடவடிக்கை!

  • June 8, 2026
  • 0 Comments

ஜப்பானிய நகரமான உட்சுனோமியாவில் (Utsunomiya) உள்ள அனைத்து தொடக்க பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் முதல் முறையாக கரடி ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஐந்து லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இருப்பினும் இதுவரை அக்கரடி பிடிபடவில்லை. கடைசியாக அந்த கரடி பாடசாலையொன்றுக்கு அருகில் காணப்பட்டதாக கூறப்பகிறது. இதனைத் தொடர்தே பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் முழுவதும் கரடித் தாக்குதல்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வரும் வேளையில் இந்தச் […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு NPP அரசுக்கு வலுக்கிறது அழுத்தம்!

  • June 8, 2026
  • 0 Comments

“வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல முழு நாட்டுக்கும் மாகாணசபை முறைமை அவசியம். எனவே, மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்பது தேசிய மக்கள் சக்தி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தலை […]

செய்தி விளையாட்டு

விசா சர்ச்சைக்கு மத்தியில் மெக்சிக்கோவில் களமிறங்கியது ஈரான் அணி!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரானின் உலகக் கோப்பை கால்பந்து அணி மெக்சிகோவில் உள்ள டிஹுவானா (Tijuana) நகரில் தரையிறங்கியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக துருக்கியில் பயிற்சி பெற்று வந்த ஈரானிய அணி, அங்கிருந்தே நேற்று மெக்சிக்கோ வந்துள்ளது. தங்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய விசா கிடைக்குமா என்பதில் நிலவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக, ஈரானிய கால்பந்து சம்மேளனம் , பேச்சுவார்த்தை நடத்தி, தங்களின் முதன்மைப் பயிற்சி முகாமை அரிசோனாவில் இருந்து மெக்சிகோவிற்கு மாற்றியது. ஈரான் அணி விளையாடவிருக்கும் முதல் போட்டிக்கு வெறும் 10 […]

உலகம்

இங்கிலாந்தின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

  • June 8, 2026
  • 0 Comments

கொலம்பியா – மிசோரியில் (Missouri) உள்ள இங்கிலாந்தின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு அருகே நேற்று துப்பாக்கிச்சூட்டு  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் ஏறக்குறைய 09 பேர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஊழியர்கள்  புளோரிடாவில் உள்ள பயிற்சி முகாமில் இருந்தமையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கான காரணத்தை அறிய பொலிஸார் தற்போது விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக […]

உலகம்

தென்கொரியாவில் சிறை கைதிகளுக்கு குளிரூட்டும் (AC)வசதியை வழங்குவதற்கு எதிர்ப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

தென்கொரியாவில் மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்தி சிறைக்கைதிகளுக்கு  குளிரூட்டும் வசதியை வழங்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, சிறைகளில் குளிரூட்டும் அமைப்பை மேம்படுத்துவது என்பது, எளிதில் பாதிக்கப்படக்கூடிய கைதிகளையும் சீர்திருத்த அதிகாரிகளையும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு குறைந்தபட்ச நடவடிக்கையாகும் என்று அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. அத்துடன் இந்த திட்டத்திற்கு 1.2 பில்லியன் வோன் ($779,000) செலவாகும் என்று நீதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நியாயப்படுத்திப் பேசிய அமைச்சகம், குளிரூட்டிகள் சிறை அறைகளில் அல்லாமல் நடைபாதைகளில் நிறுவப்படும் என்றும், […]

உலகம் கல்வி

போர் நிறுத்த ஒப்பந்தமீறலுக்கு அமெரிக்காவே பொறுப்பு: ஈரான் சீற்றம்!

  • June 8, 2026
  • 0 Comments

போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பு என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei குற்றம் சாட்டியுள்ளார். பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அமெரிக்கக் கொள்கைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. வாஷிங்டனின் நேரடி ஆதரவு இன்றி இஸ்ரேலால் இத்தகைய அத்துமீறல்களைச் செய்ய இயலாது எனவும் Esmaeil Baghaei சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவின் தலையீடே முதன்மைக் காரணம் என ஈரான் கருதுகின்றது.