ஆஸ்திரேலியாவில் நிலத்தடி பன்கரில் 2.7 டன் கோகோயின் பறிமுதல்
ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் உள்ள நிலத்தடி பன்கர் அமைப்பிலிருந்து (Underground bunker) அந்நாட்டு வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகையாக 2.7 டன் கோகோயின் cocaine போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கோகோயினின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 816 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் சோதனையின் போது பொலிஸாரிடமிருந்து தப்பியோட முயன்ற 21 மற்றும் 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வணிக […]













