யுரேனியத்தைச் செறிவூட்டுவது எங்கள் உரிமை, அதை அமெரிக்கா ஏற்க வேண்டும்
யுரேனியத்தைச் செறிவூட்டும் எங்கள் உரிமையை அமெரிக்கா ஏற்க வேண்டும் என ஈரான் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, தனது நாடு யுரேனியத்தைச் செறிவூட்டும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள மசூத் பெஷெஷ்கியன் (Masoud Pezeshkian), “வன்முறை, அடக்குமுறை மற்றும் அவமானத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
“செறிவூட்டும் உரிமையையும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதை அவர்கள் [அமெரிக்கா] ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என உறுதிப்பட கூறியுள்ளார்.




