ஐரோப்பா

பிரித்தானியாவில் மூடப்படும் ரயில் பாதை – பயணிகளின் கவனத்திற்கு

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட் (Bedford ) பகுதியில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து அப்பகுதியூடான இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அந்த பாதை புனரமைப்பு பணிகளுக்காக வரும் 28 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பெட்ஃபோர்டுக்கும் (Bedford ) லண்டன் செயின்ட் பான்கிராஸுக்கும் (London St Pancras) இடையிலான ரயில் பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூடல் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் எனவும் ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த ரயில் விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்ததுடன், மேலும் 09 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்