ஐ.நா அணுசக்தி ஆணையத்தின் தலைவர் சுவிட்சர்லாந்தில் – ஈரான் தொடர்பில் ஆய்வு
ஈரானின் தற்போதைய கள நிலவரங்களை மதிப்பாய்வு செய்யும் நோக்கில் ஐ.நா அணுசக்தி முகமையின் தலைவர் இன்று சுவிட்சர்லாந்தின் மூத்த அரசியல் அதிகாரியை சந்தித்துள்ளார்.
ஐ.நா.வின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தலைமை தாங்கும் ரஃபேல் க்ரோசி (Rafael Grossi) , சுவிஸ் கூட்டாட்சி மன்றத்தின் துணைத் தலைவர் இக்னாசியோ காசிஸைச் சந்திதுள்ளார்.
அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனைக் கட்டுப்படுத்தும் பராக் ஒபாமாவின் 2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கு நாடு இணங்குகிறதா என்பதைச் சரிபார்க்க, ஈரான் சர்வதேச அணுசக்தி முகமையை (IAEA) ஒரு ஆய்வாளராக ஏற்றுக்கொண்டிருந்தது.
டொனால்ட் டிரம்ப் 2018-ல் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார். மேலும், 2025 ஜூன் 22 அன்று அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் சர்வதேச அணுசக்தி முகமைக்கான அனைத்து அணுகல்களையும் இடைநிறுத்தியது.
அதன்பிறகு பாதிக்கப்பட்ட நிலையங்களில் எந்த ஆய்வுகளும் நடைபெறவில்லை, ஆனால் இந்த மாத தொடக்கத்தில் தனியான புஷேர் அணுமின் நிலையத்தில் முகமை தனது வழக்கமான ஆய்வை மீண்டும் தொடங்கியது.




