ஐரோப்பா

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்!

  • May 31, 2026
  • 0 Comments

ஐரோப்பாவின் மிகப்பெரியதும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான ஸபோரிஷியா (Zaporizhzhia ) அணுமின் நிலையம் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலால் முக்கிய உபகரணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என ரஷ்ய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய படைகள் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி தாக்குதல்களை முன்னெடுத்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலை திட்டமிட்ட சதி என ரோசாட்டமின் (Rosatom) தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ்  ( Alexei Likhachev) தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த தாக்குதலை தங்கள் […]

ஐரோப்பா

பாரிஸில் கால்பந்து இரசிகர்களுக்கு இடையே வெடித்த மோதல்! பலர் கைது!

  • May 31, 2026
  • 0 Comments

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் கால்பந்து தொடருக்கான இறுதிபோட்டி நேற்று நடைபெற்றது. இதில் அர்செனலுக்கு எதிராக பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) அணி வெற்றிப்பெற்றது. இதனைத் தொடர்ந்து போட்டியை காணவந்த கால்பந்து இரசிகர்களுக்கு இடையே கலவரம் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்கு பாரிஸில் உள்ள PSG-யின் பார்க் டி பிரின்சஸ் மைதானத்தைச் சுற்றி பதட்டமான சூழல்களும், சிறு மோதல்களும் ஏற்பட்டதாக பொலிஸார் விவரித்துள்ளனர். கலவரத்தை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக  130  பேர் தடுத்துவைக்கப்பட்டதாகவும், 45 பேர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் […]

ஐரோப்பா

பிரித்தானியா முழுவதும் கேட்ட மர்ம ஒலி!! வீடுகள் அதிர்ந்ததால் பரபரப்பு!

  • May 31, 2026
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் நேற்றைய தினம் மர்மமான வெடிச் சந்தம் ஒன்று கேட்டதாக பெரும்பாலான மக்கள் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த சத்தம் விண்கல் அல்லது எரிமலைப் பாறையால் ஏற்பட்டிருக்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாசசூசெட்ஸில் (Massachusetts) உள்ள காவல் துறைகளுக்கு அந்தச் சத்தம் குறித்து ஏராளமான அழைப்புகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குடியிருப்பாளர்கள் பலர் வீடு அதிரும் ஒரு உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுவொரு விண்கல் தொடர்பான சத்தமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்களான […]

உலகம்

நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சி!! கூட்டிணைந்த 03 நாடுகள்!

  • May 31, 2026
  • 0 Comments

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ” நீருக்கடியில் இயங்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றம் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஈடுபடவுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய அறிவிப்பு நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. புதிய தொழில்நுட்பம் 2027-ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கடலடி கேபிள்கள் மற்றும் குழாய்களைப் பாதுகாக்க இது உதவும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கஸ்’ (Aukus) என்று அழைக்கப்படும் முத்தரப்பு இராணுவக் கூட்டணியின் ஒரு பகுதியாக இதற்கான […]

இலங்கை

எரிபொருளுக்கான விலை உயர்வு!!

  • May 31, 2026
  • 0 Comments

எரிபொருளுக்கான விலையை உயர்த்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் லங்கா வொயிட் டீசலின் விலை  15 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை  407 ரூபாயாகும். அதேபோல்   சூப்பர் டீசல் லீட்டர் ஒன்றின்  விலை  20 ரூபாயால் உயர்த்தப்பட்டு 478  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் ஆக்டேன் 95 பெட்ரோலின் விலை 25 உயர்த்தப்பட்டுள்ளது, அதன் புதிய […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் 06 சிசுக்களின் மரணம் தொடர்பில் விசாரணை வேட்டை!

  • May 31, 2026
  • 0 Comments

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் பிறந்து 03 நாட்களே ஆன 06 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் தற்போது கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்புப் பிரிவில் குளிரூட்டி பழுதடைந்ததாக கூறப்படுகிறது. மிதமிஞ்சிய வெப்பநிலையே குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் என மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய எங்களுக்குச் சிறிது அவகாசம் தேவை, என்றும்  மருத்துவமனையின் இயக்குநர்களில் […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை விதிகளைப் பின்பற்றுமாறு கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை

  • May 30, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள ஈரான், அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் வணிக மற்றும் இராணுவக் கப்பல்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளது. ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணையின் மேலாண்மை ஈரான் ஆயுதப் படைகளின் முழு அதிகாரத்தின் கீழ் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய்க் கப்பல்களும் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், […]

உலகம் செய்தி

லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் – பலி எண்ணிக்கை 3,371 ஆக உயர்வு

  • May 30, 2026
  • 0 Comments

லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,371 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 2 முதல் நடைபெற்ற தாக்குதல்களில் 10,129 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியான தாக்குதல்களால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மோதல்களால் நாட்டின் மக்கள்தொகையில் […]

உலகம் செய்தி

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – நிலைமை மிகவும் கவலைக்குரியது என எச்சரிக்கை

  • May 30, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் வேகமாகப் பரவி வருவது மிகவும் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளதாக மருத்துவத் தொண்டு நிறுவனமான MSF எச்சரித்துள்ளது. நோய் பரவல் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், இதற்கு முன்பு இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை அதிகமான பாதிப்புகள் பதிவாகவில்லை என MSF அமைப்பின் துணை பணிப்பாளர் டொக்டர் ஆலன் கோன்சலஸ் தெரிவித்துள்ளார். எபோலாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு காங்கோவின் இடுரி மாகாணத்திற்கு, நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வையிட உலக […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல் தீவிரம்

  • May 30, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கிழக்கு லெபனானின் ஸூதார் நகர புறநகர்ப் பகுதிகளில், இஸ்ரேலிய இராணுவத்தின் மெர்காவா டாங்கிகளை வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. அதேவேளை, தெற்கு லெபனானின் ட்பெய்ன் நகர புறநகர்ப் பகுதிகளுக்குள் நுழைய முயன்ற இஸ்ரேலியப் படைகளை குறிவைத்து ஹிஸ்புல்லா வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதுடன், இரு தரப்பினருக்கும் இடையே நேரடி மோதலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தெற்கு லெபனானின் முக்கிய பொருளாதார […]