பிரித்தானியா முழுவதும் கேட்ட மர்ம ஒலி!! வீடுகள் அதிர்ந்ததால் பரபரப்பு!
பிரித்தானியா முழுவதும் நேற்றைய தினம் மர்மமான வெடிச் சந்தம் ஒன்று கேட்டதாக பெரும்பாலான மக்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சத்தம் விண்கல் அல்லது எரிமலைப் பாறையால் ஏற்பட்டிருக்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மாசசூசெட்ஸில் (Massachusetts) உள்ள காவல் துறைகளுக்கு அந்தச் சத்தம் குறித்து ஏராளமான அழைப்புகள் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குடியிருப்பாளர்கள் பலர் வீடு அதிரும் ஒரு உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுவொரு விண்கல் தொடர்பான சத்தமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்களான பமீலா கார்ட்னர் (Pamela Gardner) மற்றும் எரிக் ஃபிஷர் (Eric Fisher) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வளிமண்டலத்திற்குள் ஒரு விண்கல் நுழைந்திருக்கலாம் என்பதற்கு ஆதாரமாக, மின்னல் வரைபடக் கருவி உள்ளிட்ட செயற்கைக்கோள் தரவுகளை அவர்கள் மேற்கோள்காட்டியுள்ளனர்.
இதேவேளை விண்கற்கள் அதிக வேகத்தில் வளிமண்டலத்திற்குள் ஊடுருவும்போது அழுத்த அலைகளை உருவாக்குவதன் மூலம் சோனிக் பூம்களை உருவாக்க முடியும் என்று அமெரிக்க வானிலை ஆய்வுச் சங்கம் தெரிவித்துள்ளது.




