ஹோர்முஸ் நீரிணை விதிகளைப் பின்பற்றுமாறு கப்பல்களுக்கு ஈரான் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள ஈரான், அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் வணிக மற்றும் இராணுவக் கப்பல்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளது.
ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணையின் மேலாண்மை ஈரான் ஆயுதப் படைகளின் முழு அதிகாரத்தின் கீழ் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய்க் கப்பல்களும் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படையிடமிருந்து முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் கப்பல்களின் பாதுகாப்பு கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், அப்பகுதியில் செயல்படும் வெளிநாட்டு இராணுவப் படைகளுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல்சார் நிர்வாகம் அல்லது கப்பல் போக்குவரத்தில் தலையிடும் எந்தவொரு முயற்சிக்கும் தகுந்த பதிலடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




