இலங்கை செய்தி

தையிட்டி விகாரைக்கு முன் இன்றும் போராட்டம்

  • May 30, 2026
  • 0 Comments

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் இன்றைய தினம் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை செய்தி

06 மின்கல எரிசக்தி சேமிப்பு தொகுதிகள் இன்று கொழும்பு வருகை

  • May 30, 2026
  • 0 Comments

2025 ஜூலை மாதத்தில் அரசாங்கத்தினால் 160 மெகாவாட் கொள்ளளவு கொண்ட 16 மின்கல எரிசக்தி சேமிப்பு அமைப்புகளுக்காக (BESS) சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த டெண்டர்கள் கோரப்பட்டிருந்த நிலையில், அதன் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, விண்ட்போர்ஸ் பிஎல்சி (Windforce PLC) நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 6 தொகுதிகள் இன்று (30) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த அமைப்புகள் மாஹோ, வவுனியா, சுன்னாகம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சார […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் குழாய் மூலமான நீர் விநியோகம் தடைப்பட வாய்ப்பு!

  • May 30, 2026
  • 0 Comments

பிரத்தானியாவை உலுக்கும் வெப்ப அலை காரணமாக நீர் பயன்பாடு கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மக்களுக்கு குழாய் மூலம் நீர் விநியோகம் செய்வதை நிறுத்துமாறு தேம்ஸ் வாட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக தண்ணீர் ஊற்றும் கேன்களைப் பயன்படுத்தவும், முடிந்தவரை தண்ணீரை மறுபயன்பாடு செய்யவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கார் கழுவுதல் போன்ற பணிகளைத் தாமதப்படுத்தவும் தேம்ஸ் வாட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  

உலகம்

காங்கோவில் எபோலா மரணங்களின் எண்ணிக்கை உயர்வு!

  • May 30, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பில்  உலக சுகாதார அமைப்பு  வெளியிட்டுள்ள தகவலில்,  எபோலா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 906 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உகாண்டாவிலும் ஒன்பது எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

ஆப்கானிஸ்தானில் கோர விபத்து – 18 பேர் உயிரிழப்பு!

  • May 30, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நெடுஞ்சாலையொன்றில் கவிழ்ந்து இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 10 குழந்தைகள் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக நங்கர்ஹாரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் (Zabihullah Mujahid)   ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தினார், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தனது […]

உலகம் செய்தி

லெபனானில் இருந்து வந்த ட்ரோன் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தகவல்

  • May 30, 2026
  • 0 Comments

லெபனானிலிருந்து இஸ்ரேலிய வான்வெளிக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் ட்ரோன் ஒன்றை இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. சமூக ஊடக தளமான X-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில், லெபனானிலிருந்து வந்த ட்ரோன் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து அது வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், லெபனான் எல்லைக்கு அருகிலுள்ள இஸ்ரேலிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான வான்வழி இலக்கு ஒன்று தரையில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று இராணுவம் கூறியுள்ளது. அதேவேளை, இடைமறிக்கப்பட்ட ட்ரோனின் துண்டுகள் […]

உலகம்

ஜப்பானின் மக்கள் தொகை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி!

  • May 30, 2026
  • 0 Comments

ஜப்பானின் மக்கள்தொகை கடந்த 05 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. சுமார்  2.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளைச் செயல்படுத்திய போதிலும்,  மக்கள் தொகை வீழச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை கணக்கெடுப்பு 05 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. இதன்படி, 2020 இல் இருந்த மக்கள் தொகையை விட 2025-ல் 123 மில்லியனாகக் குறைந்துள்ளது. இது தொடர்பில் […]

ஐரோப்பா

ட்ரோன் அச்சுறுத்தல் : ஜெர்மனியின் விமான நிலையம் மூடப்பட்டது!

  • May 30, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் மியூனிக் விமான நிலையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் ட்ரோன் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து விமான நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை செய்தித் தொடர்பாளர், இரு விமானிகள் ட்ரோனை இனங்கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்திற்கு வருகை தந்தது. அங்கு கள ஆய்வுகளை மேற்கொண்டதை தொடர்ந்து  ஜெர்மன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் ஒருங்கிணைந்து ஓடுபாதையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

இலங்கை – கியூபா இடையே சுகாதாரத் துறையை மேம்படுத்த புதிய இணக்கம்

  • May 30, 2026
  • 0 Comments

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான கியூபாக் குடியரசின் தூதுவர் பட்ரிசியா லாசரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) ஆகியோருக்கு இடையில், சுகாதாரத் துறை உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்  அண்மையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால உறவுகள் குறித்தும், அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை மற்றும் […]

உலகம்

கனடாவில் இந்திய வம்சாவளியினரை குறிவைக்கும் குற்றக் கும்பல்!! பணம் மட்டுமே இலக்கு!

  • May 30, 2026
  • 0 Comments

கனடாவில் சுமார் 1000 பேரை கொண்ட இந்தியக் கும்பல் ஒன்று நாடு முழுவதும் தாக்குதல் நடத்துவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் ( Lawrence Bishnoi) என்று அழைக்கப்படும் இந்த கும்பல் தாக்குதல் எச்சரிக்கை அடங்கிய கடிதத்தை ரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உள்ள  காவல் நிலையமொன்றுக்கு அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்தில் கனேடிய வணிக நிறுவனங்கள் பணம் செலுத்த மறுத்தல் வன்முறையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக […]