உலகம் செய்தி

வங்கதேசத்தில் 06 சிசுக்களின் மரணம் தொடர்பில் விசாரணை வேட்டை!

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் பிறந்து 03 நாட்களே ஆன 06 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வங்கதேசத்தில் தற்போது கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்புப் பிரிவில் குளிரூட்டி பழுதடைந்ததாக கூறப்படுகிறது.

மிதமிஞ்சிய வெப்பநிலையே குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் என மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய எங்களுக்குச் சிறிது அவகாசம் தேவை, என்றும்  மருத்துவமனையின் இயக்குநர்களில் ஒருவரான நஹிதா யாஸ்மின் கூறியுள்ளார்.

இதற்கிடையே தற்போது வரை நடைபெற்ற விசாரணைகளில்  முறையற்ற அல்லது தவறாக சிகிச்சையளிக்கப்படமைக்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!