உலகம் செய்தி

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – நிலைமை மிகவும் கவலைக்குரியது என எச்சரிக்கை

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் வேகமாகப் பரவி வருவது மிகவும் கவலைக்குரிய நிலையை உருவாக்கியுள்ளதாக மருத்துவத் தொண்டு நிறுவனமான MSF எச்சரித்துள்ளது.

நோய் பரவல் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், இதற்கு முன்பு இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை அதிகமான பாதிப்புகள் பதிவாகவில்லை என MSF அமைப்பின் துணை பணிப்பாளர் டொக்டர் ஆலன் கோன்சலஸ் தெரிவித்துள்ளார்.

எபோலாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு காங்கோவின் இடுரி மாகாணத்திற்கு, நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வையிட உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சென்றுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தற்போது காங்கோவில் 1,000-க்கும் மேற்பட்ட எபோலா பாதிப்புகள் சந்தேகிக்கப்படுவதுடன், குறைந்தது 246 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அண்டை நாடான உகாண்டாவில் ஒன்பது உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளும் ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளன.

“இடுரி மாகாணத்தில் எபோலா பரவல் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது” என டாக்டர் ஆலன் கோன்சலஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!