ஐரோப்பா

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்!

ஐரோப்பாவின் மிகப்பெரியதும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான ஸபோரிஷியா (Zaporizhzhia ) அணுமின் நிலையம் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதலால் முக்கிய உபகரணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என ரஷ்ய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய படைகள் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி தாக்குதல்களை முன்னெடுத்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இந்த தாக்குதலை திட்டமிட்ட சதி என ரோசாட்டமின் (Rosatom) தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ்  ( Alexei Likhachev) தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த தாக்குதலை தங்கள் படைகள் முன்னெடுக்கவில்லை என உக்ரைன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்