இலங்கை செய்தி

டித்வா புயல் சேதம்: 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை ஒப்புதல்

'டித்வா' புயல் காரணமாக மேல், சபரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

‘டித்வா’ புயல் காரணமாக மேல், சபரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக, 18 மாத காலத்திற்குள் 9 பாலங்கள் புனரமைக்கப்படவுள்ளன.. இந்த புனரமைப்புப் பணிகளுக்காகச் சீனா 7,929 மில்லியன் யுவான் நிதியுதவி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான ஒப்பந்தம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்தாகவுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இம்முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதோடு, இத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்தின் நிச்சயக்கப்பட்ட திட்டமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை