பாரிஸில் கால்பந்து இரசிகர்களுக்கு இடையே வெடித்த மோதல்! பலர் கைது!
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் கால்பந்து தொடருக்கான இறுதிபோட்டி நேற்று நடைபெற்றது. இதில் அர்செனலுக்கு எதிராக பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) அணி வெற்றிப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து போட்டியை காணவந்த கால்பந்து இரசிகர்களுக்கு இடையே கலவரம் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு பாரிஸில் உள்ள PSG-யின் பார்க் டி பிரின்சஸ் மைதானத்தைச் சுற்றி பதட்டமான சூழல்களும், சிறு மோதல்களும் ஏற்பட்டதாக பொலிஸார் விவரித்துள்ளனர்.
கலவரத்தை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 130 பேர் தடுத்துவைக்கப்பட்டதாகவும், 45 பேர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் கண்ணீர்புகைக் குண்டும் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 06 வாகனங்களும் இரண்டு வணிக நிறுவனங்களும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியை முன்னிட்டு பாரிஸ் முழுவதும் 22,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




