இந்தியா செய்தி

ராஜஸ்தானை தாக்கிய மிகப்பெரிய புழுதிப் புயல் – பெரும் அச்சத்தில் மக்கள்

  • May 31, 2026
  • 0 Comments

ராஜஸ்தானின் பிகானேர் பகுதியை நேற்று மதியம் ஒரு மிகப்பெரிய புழுதிப் புயல் தாக்கியது. பிகானேர் பகுதியில் நேற்று மதியம் வீசிய புழுதிப் புயலில், பகல் நேரம் இருள் போல காட்சியளித்தது. மிகப்பெரிய மஞ்சள் புழுதிப் புயல் நகரத்தை நோக்கி முன்னேறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த புழுதிப் புயல் காரணமாக பிகானேரின் முக்கிய வீதிகளில் எதிரில் வருபவர்கள் தெரியாத அளவுக்கு காட்சித் திறன் கடுமையாக பாதித்தது. மஞ்சள் நிற புழுதிப் புயல் மற்றும் ஒரு […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணை வழியாக 24 மணி நேரத்தில் 28 கப்பல்கள் பயணம் – ஐஆர்ஜிசி தகவல்

  • May 31, 2026
  • 0 Comments

கடந்த 24 மணி நேரத்தில் எண்ணெய் டேங்கர்கள், கொள்கலன் கப்பல்கள் மற்றும் பிற வர்த்தகக் கப்பல்கள் உட்பட மொத்தம் 28 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பாகக் கடந்து சென்றதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது. ஐஆர்ஜிசி கடற்படையின் ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் இந்தக் கப்பல் போக்குவரத்து நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை மீதான கண்காணிப்பும் கட்டுப்பாடும் தொடர்ச்சியாக, உறுதியுடனும் அதிகாரத்துடனும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

உலகம் செய்தி

லெபனானில் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த இஸ்ரேல் உத்தரவு

  • May 31, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். “ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் எங்களின் பிடியை மேலும் ஆழப்படுத்தி விரிவுபடுத்துவதே தற்போதைய உத்தரவு” என அவர் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில் உள்ளன.

இலங்கை

பேருந்து கட்டணத்தை உயர்த்த முன்மொழிவு!!

  • May 31, 2026
  • 0 Comments

எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப இடைக்கால பேருந்துக் கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜூலை மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்திற்கு முன்னர் இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அச்சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதன்படி, அடுத்த மாதம் இரண்டாம் கிகதி முதல் ஐந்து சதவிகிதக் கட்டண […]

ஆஸ்திரேலியா செய்தி

பழைய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு வியூகம் அமைக்கும் ஆஸ்திரேலியா

  • May 31, 2026
  • 0 Comments

ஆக்கஸ் (AUKUS) ராணுவ ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரேலியா பெறவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்தும் அமெரிக்க கடற்படையிடம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள (Second-hand) நீர்மூழ்கிக் கப்பல்களாகவே இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புத் துறை தலைவர்களின் உயர்மட்ட மாநாட்டில் (Shangri-La Dialogue) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” ஆக்கஸ் (AUKUS) முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியா இரண்டு பழைய நீர்மூழ்கிக் கப்பல்களையும், ஒரு […]

உலகம் செய்தி

‘ஆபரேஷன் சிந்தூர்’- இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தியது!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் Pete Hexathon தெரிவித்துள்ளார். இந்தியா கடந்தாண்டு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் பலத்தை உலக நாடுகள் அறியக்கூடியதாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். ஆசிய-பசிபிக் பாதுகாப்பு உச்சி மாநாடு, சிங்கப்பூரில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் 44 ஆசிய-பசிபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இங்கு உரையாற்றுகையிலேயே […]

உலகம் கல்வி

கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை!

  • May 31, 2026
  • 0 Comments

ஈரான்மீது தொடுக்கப்படும் எந்தவொரு ஆக்கிரமிப்பு முயற்சிக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரானின் எல்லைப்பகுதிகளை நோக்கி எடுக்கப்படும் எந்தவொரு பகைமை நடவடிக்கையையும் முந்தைய தாக்குதல்களை விடவும் பலமடங்கு ஆற்றலுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஈரானிய இராணுவம் எதிரிகளின் சவால்களை முறியடிக்க உறுதியுடனும் முழு பலத்துடனும் நிலைபெற்றுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் பாரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் பாரிய அளவிலான தரைவழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எல்லையோரக் குடியிருப்புகளுக்கு நிலவும் நேரடி அச்சுறுத்தல்களை நீக்குவதையும், ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இஸ்ரேலியப் படைகள் ஏற்கனவே Litani ஆற்றைக் கடந்து முன்னேறியுள்ளதோடு, Nabatieh போன்ற வடக்கு நோக்கி அமைந்துள்ள பகுதிகளுக்கும் தங்கள் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளன. தற்காப்பு வளையத்தை வலுப்படுத்தவும் தீவிரவாத ஊடுருவல்களைத் தடுக்கவும் கூடுதல் ராணுவ வீரர்கள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஹர்ஷ டி சில்வாவுக்கு நிதி அமைச்சு பதவி?

  • May 31, 2026
  • 0 Comments

“நிதி அமைச்சு பதவியை பெறுவதற்காக கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்துடன் இணையவுள்ளார் என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே பயணிப்பார்.” இவ்வாறு ஐமசவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “நிதி அமைச்சு பதவியை பெறுமாறு ஹர்ஷ டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டாலும் அதனை ஏற்கும் நிலைப்பாட்டில் அவர் இல்லை. ரணில் விக்கிரமசிங்க […]

செய்தி விளையாட்டு

IPL சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா RCB?

  • May 31, 2026
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் 2026 போட்டி தொடரில் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் 2-வது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றன. லீக் சுற்றில் ஆர்சிபி அணி முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. தொடர்ந்து தகுதி சுற்று 1-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ஓட்டங்கள் […]