எரிபொருளுக்கான விலை உயர்வு!!
Sri Lanka Petroleum Corporation announces new fuel prices
எரிபொருளுக்கான விலையை உயர்த்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விலை உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் லங்கா வொயிட் டீசலின் விலை 15 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 407 ரூபாயாகும்.
அதேபோல் சூப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு 478 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லிட்டர் ஆக்டேன் 95 பெட்ரோலின் விலை 25 உயர்த்தப்பட்டுள்ளது, அதன் புதிய விலை 495 ரூபாயாகும்.
ஒரு லிட்டர் ஆக்டேன் 92 பெட்ரோலின் விலை 24 உயர்த்தப்பட்டு 434 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை லங்கா மண்ணெண்ணெயின் விலையை 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





