இலங்கை

சீனியை பதுக்கி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!

  • November 12, 2023
  • 0 Comments

சீனியை பதுக்கி வைத்துள்ள அனைத்து களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர்  நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சந்தையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்  அமைச்சர் குறிப்பிட்டார்.

பொழுதுபோக்கு

மாஸ் ஆக்ஷனில் களமிறங்கும் ஜெயம் ரவி – வெளியான சைரன் பட டீசர்

  • November 12, 2023
  • 0 Comments

யம் ரவியின் சைரன் திரைப்பட டீஸர் நேற்று வெளியானது. பிரபல இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இந்த திரைப்படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, இரு வெவ்வேறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள டீசரின்படி ஜெயம் ரவி சிறைச்சாலையில் இருந்து சுமார் 14 ஆண்டுகள் கழித்து […]

இலங்கை

திருகோணமலையில் மிதமான நிலநடுக்கம் பதிவு!

  • November 12, 2023
  • 0 Comments

திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் இன்று (12.11) ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொழுதுபோக்கு

ரசிகர்களுக்கு கெத்தாக வந்து தீபாவளி வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

  • November 12, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 170வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைவர் 170 திரைப்படத்தில் திரைப்படப் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வந்தது. இதற்கு இடையில் தற்பொழுது சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு, தனது வீட்டின் முன் கூடிய ரசிகர்களை சந்தித்து தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பான […]

விளையாட்டு

உலகக்கோப்பை காலிறுதிச் சுற்றுக்காக மோதும் அணிகள்!

  • November 12, 2023
  • 0 Comments

2023 ஒருநாள் உலகக் கோப்பையின் காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டம் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே நடைபெற உள்ளது. இப்போட்டி வரும் 15ம் திகதி வான்கடே மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. அந்த போட்டிகள் வரும் 16ம் திகதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கு

காசாவில் பெரிய மருத்துவமனையில் சேவை நிறுத்தம்… 3 குழந்தைகள் பலி!

  • November 12, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் தொடர் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் தொடர்கிறது. இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள பெரிய அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். […]

இலங்கை

இலங்கையில் ரயில் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிப்பு!

  • November 12, 2023
  • 0 Comments

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதம் அம்பேபுஸ்ஸ நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப பிழையை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதன் காரணமாக பிரதான பாதையில் இயங்கும் ரயில் தாமதமாகலாம் என ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

“ஊ சொல்றியா மாமா” மீண்டும் பட்டையை கிளப்ப தயாராகும் சமந்தா..

  • November 12, 2023
  • 0 Comments

அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது புஷ்பா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை சுகுமார் இயக்கி வருகிறார். படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கொண்டாட்டத்திற்குரிய பல அம்சங்கள் இருந்த நிலையில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களும் அதிகமான […]

மத்திய கிழக்கு

பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்!

  • November 12, 2023
  • 0 Comments

காஸா போருக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது. காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில் கூறாமல், நடவடிக்கைகளால் பதிலளிக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சவூதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தெஹ்ரான் விமான நிலையத்தை வந்தடைந்த போது ஈரான் […]

இலங்கை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

  • November 12, 2023
  • 0 Comments

மாலைதீவு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓய்வறையில் வைத்து நேற்று சனிக்கிழமை இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானநிலைய அதிகாரிகள் இவருடைய பயணப் பையை சோதனை செய்த போது துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு […]