ஐரோப்பா

பிரித்தானியாவின் விரைவு விசா திட்டம் – போலியான ஆவணங்களை வழங்கி மோசடி

பிரித்தானியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விரைவுக் குடிவரவு வழிமுறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக இரகசிய விசாரணை ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் படைப்பாற்றல் வல்லுநர்களை பிரித்தானியாவிற்கு ஈர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை புலம்பெயர்ந்தோர் மோசடியாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லண்டனைச் சேர்ந்த  ஆலோசனை நிறுவனம் ஒன்று சுமார் 100,000 பவுண்ஸிற்கும் அதிகமான மதிப்புள்ள  விரிவான தொகுப்பை வழங்கியுள்ளது.

விண்ணப்பதாரர்களைத் திறமையான கலைஞர்களாகக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட இத்தொகுப்பில், சீனாவில் கலைப்படைப்புகளை உருவாக்குதல், கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல், ஊடகக் கவரேஜை ஏற்பாடு செய்தல் மற்றும் பரிந்துரைக் கடிதங்களை வழங்குதல் ஆகியவை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுமார் £98,000 விலையுள்ள இந்த “முழுமையான” சேவையானது, ஸ்டெர்லிங்கில் செலுத்தினால் கூடுதலாக 20 சதவீத மதிப்புக்கூட்டு வரியுடன், கண்காட்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் வாடிக்கையாளரின் படைப்புகளுக்கு ஊடக விமர்சனங்களைப் பெறுதல் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை பயன்படுத்திய நபர்களின் விசா விண்ணப்பங்கள் ஒன்றுக்கூட நிராகரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்த பிரிவில் விண்ணப்பித்த இரு நைஜீரிய பிரஜைகளின் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

“இங்கிலாந்து குடிவரவு அமைப்பை ஏமாற்றும் எவரையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று உள்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்