ஐரோப்பா முக்கிய செய்திகள்

அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பு இடம்பெறக்கூடாது – ஜெர்மன் திட்டவட்டம்

ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பு, உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பொருளாக இருக்கக்கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள்  இன்று தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் – ரஷ்ய அமைதி பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகள் கலந்துகொள்ளலாம் என ரஷ்யா அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ரஷ்யாவின் இந்த கூற்று தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பேசிய ஜேர்மனியின் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ், “உக்ரைன் இல்லாமல் உக்ரைன் பற்றிய விவாதங்கள் இருக்காது, ஐரோப்பா இல்லாமல் ஐரோப்பா பற்றிய விவாதங்கள் இருக்காது எனக் கூறினார்.

மேலும் ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பு பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. அது ஏற்கனவே நம்மிடம் உள்ளது,” என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே போரின் குறிப்பிட்ட அம்சங்களைக் கையாள்வதற்கு முன்பு, ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து ஒரு பரந்த உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று ரஷ்ய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்