துருக்கி – கத்தார் இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து
துருக்கியும் கத்தாரும் இன்று பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகனின் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்தான்புல்லில் துருக்கிய ஜனாதிபதி, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானியைச் Sheikh Tamim bin Hamad al-Thani சந்தித்தபோது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள எர்டோகன், ‘வளைகுடா பிராந்தியத்தில் போர் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கவும், பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தை உருவாக்கி அமைதியை நிலைநாட்டவும் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மேலும் துருக்கியும் கத்தாரும் தங்கள் எரிசக்தி கூட்டாண்மையை விரிவுபடுத்தவும் பன்முகப்படுத்தவும் பணியாற்றி வருவதாகவும், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து வளரும் என்றும் அந்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




