கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

மாலைதீவு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓய்வறையில் வைத்து நேற்று சனிக்கிழமை இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானநிலைய அதிகாரிகள் இவருடைய பயணப் பையை சோதனை செய்த போது துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)