அநுராதபுரம் தாக்குதல்: தேரர் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை
அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் பிக்குகள் முன்னெடுத்த போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான ராஜாங்கனை சத்தரதன தேரரின் தலையில் 14 தையல்கள் போடப்பட்டுள்ளன.
எனினும், அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
தனது உயிருக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், மீண்டும் ஏதேனும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டால் அநுராதபுரத்துக்குத் திரும்புவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது சிகிச்சையின்போது உதவிய மருத்துவப் பணியாளர்கள், பொலிஸார், பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொதுமக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.




