இலங்கை

சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  லாக்ஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் 12.5 கிலோ  எரிவாயுவின் விலை 1,775  ரூபாய் அதிகரிக்கப்பட்டு 6,740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேபோல்,  1,988 ரூபாயாக  இருந்த 5 கிலோ  எரிவாயுவின் விலை  732  ரூபாய் உயர்த்தப்பட்டு,  2,720 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் விலைகளுக்கு ஏற்ப இலங்கைக்கான எரிவாயு இருப்புகளை வாங்கும் செலவு அதிகரித்ததே இந்த விலை மாற்றத்திற்குக் காரணம் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

இருப்பினும், தனது விநியோகஸ்தர் வலையமைப்பு மூலம் தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்தைப் பராமரிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று லாக்ஃப்ஸ் கேஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் 1345 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் மாவட்ட வாரியாக எரிவாயு நிரப்பும் இடங்கள் மற்றும் விலைகள் குறித்த தகவல்களைப் பெறலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்