உலகம் செய்தி

தென்கொரியாவுடன் நட்புறவை வலுப்படுத்துகிறது சீனா

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் தென்கொரியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா விருப்பம் கொண்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் தென்கொரியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா விருப்பம் கொண்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூனுடனான சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட வாங் யீ, சீனாவும் தென்கொரியாவும் பிரிக்க முடியாத நெருங்கிய அண்டை நாடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளும் நல்ல அண்டை நாடுகளாகவும் நட்பு நாடுகளாகவும் உறவுகளைப் பேணுவது இருதரப்புக்கும் சரியான தெரிவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன், வெள்ளிக்கிழமை தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, சீனா – தென்கொரியா உறவுகள் மீண்டும் சரியான பாதைக்குத் திரும்பியுள்ளதாக வாங் யீ தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோல் ஆட்சிக்காலத்தில், அமெரிக்கா மற்றும் ஜப்பானுடனான உறவுகளை சியோல் வலுப்படுத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

எனினும், 2025 ஜூன் மாதம் பதவியேற்ற தற்போதைய தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங், சீனாவுடனான உறவுகளை மீண்டும் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

இதன் ஒரு கட்டமாக, 2025ஆம் ஆண்டின் இறுதியில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை கியோங்ஜுவில் வரவேற்று சந்தித்ததுடன், கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு அரசமுறைப் பயணத்தையும் மேற்கொண்டிருந்தார்.

தென்கொரியாவுடனான பரஸ்பர நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நலன்களை விரிவுபடுத்துவதற்கும் சீனா தயாராக இருப்பதாக வாங் யீ மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) அமைப்பின் தலைவர்களுக்கான மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார் .

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி