உலகம்

முக்கியக் கனிமங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முக்கியக் கனிமங்களை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

பனிப்போர் கால பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை (DPA) பயன்படுத்தி அவர் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளார்.

தொழிற் கழிவுகளில் உள்ள முக்கிய கனிமங்கள் மற்றும் அரிய தனிமங்களைத் தக்கவைக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது ஏற்றுமதி மீது கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த சட்டத்தின் மூலம் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமான முக்கிய கனிமங்களின் இருப்பை வலுப்படுத்தவும், அந்தத் தனிமங்களுக்காக சீனாவை அமெரிக்கா சார்ந்திருப்பதை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் எண்ணெய் உற்பத்தியைப் புதுப்பிக்கவும், உள்நாட்டு நிலக்கரி மின் நிலையங்களுக்கு ஆதரவளிக்கவும் அவர் இதற்கு  முன்னர் இந்த சட்டங்களை பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்