“அதிகாரத்தில் இருக்கும் சிலர் நீதியைக்கூட விற்பனை பொருளாகவே பார்க்கின்றனர்”
ஐ.நா. சபை மற்றும் பிற அமைப்புகள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய திருத்தந்தை லியோ (Pope Leo), சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகள் வெறும் போலி நாடகமாக (charade) மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார். பாரிஸில் உள்ள ஐ.நாவின் யுனெஸ்கோ (UNESCO) தலைமையகத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ” அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு மதிப்பளிப்பதற்கு பதிலாக, தங்களது சுயநலத்திற்கு தேவைப்படும்போது அதை மேற்கோள் காட்டுவதையும், தங்களைக் கட்டுப்படுத்தும்போது அதைப் புறக்கணிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். நீதியைக் கூட விற்பனை […]













