இலங்கை செய்தி

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

  • March 2, 2026
  • 0 Comments

யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை – வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜதுர்சன் (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இன்று திங்கட்கிழமை காலை, அந்த வீட்டின் பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று […]

அரசியல் இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர் சூழல்: சஜித் தலைமையில் நாளை விசேட கூட்டம்!

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இலங்கையர்களின் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விசேட கூட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமே சஜித் பிரேமதாசவால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (03) இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக, பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. மேற்படி […]

இந்தியா

மத்திய கிழக்கு போர்: புருவத்தை உயர்த்தியது டெல்லி!

  • March 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர்: புருவத்தை உயர்த்தியது டெல்லி! மத்திய கிழக்கின் தற்போதைய போர் சூழ்நிலை கவலை அளிக்கின்றது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கனடா பிரதமருடன் இணைந்து டெல்லியில் இன்று ஊடக சந்திப்பை நடத்தினார். இதன்போது மத்திய கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் மோதல் குறித்த பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘‘இத்தகைய பிரச்சினைகளுக்கு, பேச்சு மற்றும் தூதரக முயற்சிகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் […]

உலகம்

அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான் திட்டவட்டம்!

  • March 2, 2026
  • 0 Comments

“ அமெரிக்காவுடன் ஈரான் பேச்சு நடத்தாது. தன்னைதானே தற்காத்துக்கொள்ளும் உரிமை ஈரானுக்கு உள்ளது.”என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையின்தலைவர் அலி லாரிஜானி Ali Larijani தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்தள பக்கம் ஊடாகவே அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘‘டொனால்ட் ட்ரம்ப் தனது தவறான நம்பிக்கைகளால் பிராந்தியத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்க துருப்புக்களுக்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று இப்போது அவர் கவலைப்படுகிறார். தனது ஆளுமையை நிலை நாட்டிக்கொள்வதற்கான விலையை, அமெரிக்க படையினர் மற்றும் குடும்பங்கள் மீது சுமத்துகிறார். […]

உலகம்

அமெரிக்காவுக்கு ஆதரவாக 3 ஐரோப்பிய நாடுகள் களத்தில்!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான் நடத்திவரும் ஏவகணைத் தாக்குதல்களை பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. மேற்படிதாக்குதல்கள் நியாயமற்றவை எனக் குறிப்பிட்டுள்ள ஐரோப்பியத் தலைவர்கள், பிராந்தியத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பில் மூன்று ஐரோப்பிய நாடுகளும் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. பிரிட்டன் பிரதமர் தனது நாட்டின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கியுள்ளார். அத்துடன், கட்டாரை நோக்கி பாய்ந்த ஈரானின் ஏவகணையொன்றை பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.

உலகம்

லெபனான்மீதும் கை வைத்தது இஸ்ரேல்: தாக்குதலில் பலர் பலி!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான்மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல் Israel தற்போது லெபனான்மீதும் Lebanon தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் செயல்படுகின்றது. அவ்வமைப்பு ஈரான் ஆதரவு பெற்ற ஆயதபடையென கருதப்படுகின்றது. இந்நிலையில் மேற்படி தாக்குதலில் குறைந்தபட்சம் 31 பேர் பலியாகியுள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள்மீதான தாக்குதல் […]

இலங்கை செய்தி

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: அரசு விளக்கம்!

  • March 2, 2026
  • 0 Comments

நாட்டில் தேவையானளவு எரிபொருள் உள்ளது. எனவே, தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ளவேண்டாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (2) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்கண்டவாறு கூறினார். “ நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வீண் அச்சத்தால் மக்கள் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அவ்வாறு அச்சம் கொள்ள தேவை இல்லை. தேவையானளவு எரிபொருள் இருப்பில் உள்ளது. எமது கப்பல்கள் மத்திய கிழக்கு […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை நிறுத்துமாறு இலங்கை அழைப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தப்பட்டு, உலக அமைதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என அனைத்து தரப்புகளிடமும் கோருகின்றோம்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை குறித்து கருத்து வெளியிட்ட அவர், “ எங்கு நடந்தாலும், எவர் நடத்தினாலும் போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. போரால் உயிரிழப்புகளும், […]

உலகம்

போருக்குள் நுழையும் வளைகுடா நாடுகள்: பகிரங்க எச்சரிக்கை!

  • March 2, 2026
  • 0 Comments

  ஈரானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று வளைகுடா நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. “பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்கி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்” என்றும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் […]

இந்தியா

ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம்!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் நேற்று போராட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டன. வேலை நிறுத்த போராட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை, பாகிஸ்தானிலும் சில இடங்களில் போராட்டங்கள் […]

error: Content is protected !!