Makerfield இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற லேபர் கட்சி வேட்பாளர் Andy Burnham ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

Andy Burnham அபார வெற்றி – பிரதமரின் தலைப் பதவிக்கு சவால்

  • June 19, 2026
  • 0 Comments

Makerfield இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பியுள்ளார். தேர்தலில் தொழிலாளர் கட்சி (Labour Party) வேட்பாளரான Andy Burnham, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட Reform UK கட்சியின் வேட்பாளர் Robert Kenyon ஐ 9,231 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். Andy Burnham இன் இந்த வெற்றி தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரின் Keir Starmer தலைமைக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு இங்கிலாந்துப் பகுதிகளுக்கு […]

இன்று 19.06.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குச் செம்மணி அகழ்வாய்வுத் தளம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இந்த மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை செய்தி

‘சர்வதேச கண்காணிப்பு’: செம்மணியில் இன்று போராட்டம்

  • June 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை வலியுறுத்தி இன்று (19) பிற்பகல் செம்மணியில் கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் இந்தப் போராட்டத்துக்கான அவசர அழைப்பை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை […]

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 07 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் தோண்டத் தோண்ட சிக்கும் எலும்புக்கூடுகள்

  • June 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 07 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (18) நடைபெற்றது. சான்று பொருள்களாக சிறு பாசிமணி துண்டு , கை வளையல், ஆணிகள் ,பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியில் இதுவரையிலான அகழ்வு பணிகளின் போது, 387 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள […]

அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் உச்ச தலைவர் மற்றும் அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர் உலகம் செய்தி முக்கிய செய்திகள்

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து: சுவிட்சர்லாந்து நிகழ்வு ரத்து

  • June 18, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் நாளை (18) நடைபெறவிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் Ishaq Dar தெரிவித்தார். BBC Urdu செய்தி பிரிவு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே இணையவழியில் கையெழுத்திடப்பட்டதால், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை கைவிட்டுள்ளார் என தெரியவருகின்றது. இந்தநிகழ்வு  திட்டமிட்டபடி நடக்கும் என்று முன்னதாக கூறப்பட்டாலும், பிரதமரின் சமூக ஊடகப் பதிவில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த நிகழ்வின் மீதான […]

தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேல் உக்கிர தாக்குதல்களை நடத்திவருகின்றது. அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான், அமெரிக்காவுக்கிடையில் இணக்கம் எட்டப்பட்டிருந்தாலும், போரில் இருந்து விலக இஸ்ரேல் விரும்பவில்லை என்பது புலனாகின்றது. உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம் – மூவர் பலி

  • June 18, 2026
  • 0 Comments

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள Kfar Tebnit மற்றும் Zebdin ஆகிய நகரங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். லெபனான் ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும், எல்லையோரப் பாதுகாப்புப் பகுதிகளில் தங்களின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். லெபனானிலும் போர் நிறுத்தம் அவசியம் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. அதேபோல தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்பும் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் இஸ்ரேல் ராணுவம் […]

சுரேஷ் சலே, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார் என அவரது மனைவியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று நிராகரித்தார். அரசியல் இலங்கை செய்தி

ஆடைகள் களையப்பட்டு சுரேஷ் சலேவுக்கு சித்திரவதையா? அரசு மறுப்பு

  • June 18, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார், ஆடைகள் களையப்பட்டு அவமதிக்கப்பட்டார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மேற்படி விசாரணைகள் அரசியல் தலையீடுகளின்றி, முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டே நடத்தப்படுவதாகவும் அமைச்சர் இன்று (18) சுட்டிக்காட்டியுள்ளார். விசாரணையின்போது சுரேஷ் சலே, கடுமையான முறையில் நடத்தப்பட்டார் மற்றும் அவமதிக்கப்பட்டார் என அவரது மனைவியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பட்ட […]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி குறித்து மக்கள் மத்தியில் அச்சம்

  • June 18, 2026
  • 0 Comments

“இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகச் செம்மணி மாறியுள்ளமை மக்கள் மத்தியில் பரவலான அச்சத்தையும் பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.” இவ்வாறு மேற்படி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று வரை மொத்தமாக 380 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விரிவான விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது […]

யாழில் ரயில் விபத்தில் பலியான ராணுவ சிப்பாயின் சடலம் இலங்கை செய்தி

யாழில் ரயில் மோதி ராணுவச் சிப்பாய் பலி

  • June 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், அரியாலை-நெளுக்குளம் பகுதியில் ரயிலுடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்,பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து திடுக்கிடும் விவரங்கள் வெளியாகியுள்ளன. மேற்படி இராணுவச் சிப்பாய் அண்மையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். எனினும், விடுமுறைக் காலம் முடிவடைந்த பின்னரும் அவர் நீண்ட […]

சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் Rafael Grossi உலகம் செய்தி

ஈரானில் களமிறங்க தயாராகும் சர்வதேச அணுசக்தி அமைப்பு

  • June 18, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தி திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமை Atomic Energy Agency தற்போது முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதங்களைத் தயாரிக்காமல் இருக்கவும், கையிருப்பில் உள்ள யுரேனியத்தை முறையாகக் கையாளவும் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டை வெற்றிகரமாகச் செயல்படுத்த இரு தரப்பினரும் நல்லெண்ணத்துடன் செயல்படுவார்கள் என சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் Rafael Grossi நம்பிக்கை தெரிவித்துள்ளார். எந்தெந்த இடங்களைப் பரிசோதிக்க வேண்டும் என்பது […]

கொலம்பியாவின் Luis Diaz இரண்டாவது கோலை அடித்த பிறகு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். செய்தி விளையாட்டு

அதிர்ந்தது அரங்கம்: கொலம்பியா வெற்றிநடை

  • June 18, 2026
  • 0 Comments

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ‘கே’ பிரிவு (Group K) லீக் ஆட்டத்தில், அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி தனது உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றியோடு தொடங்கியுள்ளது. மெக்சிகோ சிட்டியின் புகழ்பெற்ற Estadio Azteca மைதானத்தில் 80,000-க்கும் அதிகமான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் இந்த விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது. இத்தாலியின் முன்னாள் நட்சத்திர வீரர் பாபியோ கன்னவாரோவின் (Fabio Cannavaro) பயிற்சியின் கீழ் களம் கண்ட உஸ்பெகிஸ்தான் அணி, […]